செய்திகள்

ராஜ்நாத் சிங்குடன் கெஜ்ரிவால் திடீர் சந்திப்பு

Published On 2018-07-11 13:52 GMT   |   Update On 2018-07-11 13:52 GMT
டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் இன்று மத்திய மந்திரி ராஜ்நாத் சிங்கை சந்தித்து பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
புதுடெல்லி:

டெல்லி முதல் மந்திரி - ஆளுநர் இடையிலான அதிகாரப் போட்டிக்கு சமீபத்தில் சுப்ரீம் கோர்ட் தீர்வளித்து இருந்தாலும், உயரதிகாரிகள் பணி நியமனம், பணியிட மாற்றம் மற்றும் பதவி உயர்வு  விவகாரத்தில் முதல் மந்திரி - ஆளுநர் இடையே பணிப்போர் நீடித்து வருகின்றது.

இந்நிலையில், மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கை அரவிந்த் கெஜ்ரிவால் துணை முதல் மந்திரி மனிஷ் சிசோடியா ஆகியோர் இன்று சந்தித்து பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர்.

குறிப்பாக, டெல்லி ஆளுநரின் போக்கை கண்டித்து அவர் முறையிட்டார். இவ்விவகாரம் தொடர்பாக அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து இன்னும் மூன்று நாட்களில் முடிவு தெரிவிப்பதாக ராஜ்நாத் சிங் தன்னிடம் உறுதியளித்ததாக இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கெஜ்ரிவால் தெரிவித்தார். #servicesissue #KejriwalmeetRajnath
Tags:    

Similar News