செய்திகள்

அமித்ஷாவுக்கு எதிராக 100 போலீஸ் நிலையத்தில் புகார் - மாணவர் காங்கிரசார் அதிரடி

Published On 2018-07-04 07:37 GMT   |   Update On 2018-07-04 07:37 GMT
பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷாவுக்கு எதிராக காங்கிரஸ் மாணவர் பிரிவு போலீசில் புகார் அளித்து உள்ளது.
புதுடெல்லி:

அமித்ஷாவுக்கு எதிராக 28 மாநிலங்களில் உள்ள 100 மாவட்ட போலீஸ் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆளும் கட்சியின் தலைவர் பதவியில் இருக்கும் அமித்ஷா தனக்கு உள்ள அதிகாரத்தை ஆட்சியில் தவறாக பயன்படுத்தி சட்டத்தை மீறி நடந்து வருகிறார் என்று மாணவர் காங்கிரஸ் அளித்துள்ள புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி துணை செயலாளரும், காங்கிரஸ் மாணவர் பிரிவின் தலைவருமான ருச்சி குப்தா தலைமையில் மாணவர் பிரிவினர் ஊர்வலமாக சென்று டெல்லி பாராளுமன்ற சாலையில் உள்ள போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அப்போது அவர்கள் அமித்ஷா, பிரதமர் மோடிக்கு எதிராக கோ‌ஷங்களை எழுப்பினார்கள்.

ஆளும் கட்சியின் தலைவராக இருக்கிறார் என்ற ஒரே ஒரு காரணத்திற்காக ஒரு தனிநபர் மீது (அமித்ஷா) எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

ஆட்சி அதிகாரம் தங்கள் கையில் இருப்பதை பயன்படுத்திக் கொண்டு அரசியல் ரீதியாக தங்களுக்கு எதிரானவர்களை ரவுடிகள் மூலம் பா.ஜனதாவினர் கொலை செய்து வருகின்றனர்.

இதற்கு பா.ஜனதா தலைமை முழு பாதுகாப்பு அளிக்கிறது. இதனால்தான் நாங்கள் உண்மையை உரக்க கூறி வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார். #AmitShah
Tags:    

Similar News