செய்திகள்

கவர்னர் வீட்டில் படுத்து தூங்கி தர்ணா - கெஜ்ரிவால் அதிரடி

Published On 2018-06-11 21:07 GMT   |   Update On 2018-06-11 21:07 GMT
மக்கள் திட்டங்களை செயல்படுத்தாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கவர்னர் வீட்டில் படுத்து தூங்கி தர்ணாவில் ஈடுபட்டார். #AnilBaijal #CMArvindKejriwal
புதுடெல்லி:

தலைநகர் டெல்லியில் ஆம் ஆத்மி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் ரேசன் பொருட்களை வீடு தேடி சென்று வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு சேவை திட்டங்களை கொண்டுவந்தார்.

இந்த திட்டங்களை அமல்படுத்திட சம்பந்தப்பட்ட துறை ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ஆனால் கெஜ்ரிவால் உத்தரவை ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் புறக்கணித்தனர்.

இந்நிலையில், மக்கள் திட்டங்களை செயல்படுத்தாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கவர்னர் வீட்டில் படுத்து தூங்கி தர்ணாவில் ஈடுபட்டார்.

இதுதொடபாக அவர் நேற்று இரவு துணை நிலை கவர்னர் அனில் பைஜாலை சந்திக்க அவரது இல்லம் சென்றார். ஆனல் அவரை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டது. அதனால் கவர்னர் வீட்டின் வரவேற்பாளர் அறையில் பல மணி நேரம் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தை துவக்கினார். அவருடன் மாநில மந்திரிகளும் உடனிருந்தனர். 

இதுகுறித்து கெஜ்ரிவால் கூறுகையில், அரசின் திட்டங்களை ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நிறைவேற்ற மறுக்கின்றனர். சட்டசபையில் டில்லிக்கு மாநில அரசு அந்தஸ்து அளிக்கும் தீர்மானம் நேற்று கொண்டு வரப்பட்டது. மத்திய அரசின் கைப்பாவையாக துணை நிலை கவர்னர் செயல்படுவது சரியல்ல என தெரிவித்தார். #AnilBaijal #CMArvindKejriwal
Tags:    

Similar News