செய்திகள்

2017-2018-ம் ஆண்டுக்கான வருங்கால வைப்புநிதி வட்டி விகிதம் 8.55 சதவீதம்- மத்திய அரசு அறிவிப்பு

Published On 2018-05-26 03:12 GMT   |   Update On 2018-05-26 03:12 GMT
2017-2018-ம் ஆண்டு வருங்கால வைப்புநிதிக்கான வட்டி 8.55 சதவீதம் என்பது முறைப்படி நேற்று அறிவிக்கப்பட்டதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.#CentralGovernment
புதுடெல்லி:

நாடு முழுவதும் வருங்கால வைப்பு நிதி கணக்குகளில் 5 கோடி சந்தாதாரர்கள் உள்ளனர். இதில் சந்தாதாரரிடம் பிடித்தம் செய்யப்படும் தொகைக்கு ஆண்டுதோறும் மத்திய தொழிலாளர் இலாகா வட்டி நிர்ணயம் செய்து வருகிறது.

2017-2018-ம் நிதி ஆண்டுக்கான வட்டி விகிதம் குறித்து கடந்த பிப்ரவரி மாதம் 28-ந்தேதி நடந்த வருங்கால வைப்புநிதியின் அறக்கட்டளை கூட்டத்தில் 8.55 சதவீத வட்டி நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால் கர்நாடக சட்டசபைக்கு தேர்தல் நடந்ததால், தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக இதை வருங்கால வைப்புநிதி அறக்கட்டளை நடைமுறைப்படுத்தவில்லை.

இந்த நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிந்துவிட்டதால் 2017-2018-ம் ஆண்டு வருங்கால வைப்புநிதிக்கான வட்டி 8.55 சதவீதம் என்பது முறைப்படி நேற்று அறிவிக்கப்பட்டது. கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத மிகக் குறைந்த வட்டி விகிதம் இதுவாகும். கடைசியாக 2012-13-ம் ஆண்டில் வட்டி விகிதம் மிக குறைவாக 8.5 சதவீதமாக இருந்தது, நினைவு கூரத்தக்கது. #CentralGovernment
Tags:    

Similar News