செய்திகள்

சிசிடிவி கொள்முதலில் ஊழல் - டெல்லி முதல் மந்திரிக்கு எதிராக காங்கிரஸ் போராட்டம்

Published On 2018-05-13 14:45 GMT   |   Update On 2018-05-13 14:45 GMT
டெல்லியின் முக்கிய பகுதிகளை கண்காணிக்க சி.சி.டி.வி. கொள்முதலில் ஊழல் நடந்ததாக குற்றம்சாட்டும் காங்கிரஸ் சார்பில் இன்று முதல் மந்திரிக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது.

புதுடெல்லி:

பெண்களின் பாதுகாப்பு கருதி டெல்லி முழுவதும் சுமார் ஒன்றரை லட்சம் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த ஆளும் ஆம் ஆத்மி அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால், இதற்கான டெண்டர் விடப்பட்டதில் ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் இந்த திட்டத்துக்கு கவர்னர் அனில் பைஜால் ஒத்துழைப்பு வழங்காமல் காலம்தாழ்த்தி வருகிறார். 

இந்நிலையில், சி.சி.டி.வி. கொள்முதலில் ஊழல் நடந்ததாக குற்றம்சாட்டும் காங்கிரஸ் சார்பில் இன்று மெழுகு வர்த்திகளை ஏந்தி ஊர்வலமாக சென்று அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் என காங்கிரஸ் அறிவித்தது. 

அரவிந்த் கெஜ்ரிவால் முதல் மந்திரி பதவியில் இருந்து விலக வேண்டும் என்று நடைபெறும் இந்த போராட்டத்துக்கான அறிவிப்பை டெல்லி காங்கிரஸ் பிரமுகர்கள் அரவிந்தர் சிங் லவ்லி மற்றும் ஹாரூன் யூசுப் ஆகியோர் வெளியிட்டனர்.



இந்நிலையில், அறிவித்தபடி இன்று காங்கிரஸ் கட்சியினர் மெழுகு வர்த்திகளை ஏந்தி ஊர்வலமாக சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் அஜய் மகான், பிசி சாக்கோ உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Tags:    

Similar News