செய்திகள்

இணையத்தில் வேலை தேடுகிறீர்களா? உங்களுக்காக கூகுள் செய்துள்ள புதிய வசதிகள்

Published On 2018-04-24 15:58 GMT   |   Update On 2018-04-24 15:58 GMT
இணையதளத்தில் வேலைவாய்ப்பு தேடுபவர்களுக்கு எளிதான வகையில் மற்ற வேலைவாய்ப்பு தளங்களை ஒருங்கிணைத்து கூகுள் புதிய வசதியை அமல்படுத்தியுள்ளது. #Google
புதுடெல்லி:

இணையதளத்தில் வேலை தேடுபவர்களுக்காக நூற்றுக்கணக்கான வெப்சைட்டுகள் கொட்டிக்கிடக்கின்றன. பிரெஷ்ஷெர் வேர்ல்ட், ஐபிம் டேலண்ட் சொல்யூசன், லிங்கிட் இன், குயுக்கர், ஷைன், டைம்ஸ் ஜாப் போன்ற தளங்கள் பட்டதாரிகளின் நம்பிக்கைக்கு உரிய தளங்களாக உள்ளன.

இந்நிலையில், வேலை வாய்ப்பு தேடுபவர்கள் எளிதாக தகவல்களை பெற சில மாறுதல்களை கூகுள் தேடுபொறி செய்துள்ளது. வாய்ப்புகளை பில்டர் செய்யும் வசதி, சேமிப்பவை, மற்றவர்களுக்கு தெரியப்படுத்துதல் உள்ளிட்ட ஆப்ஷன்களில் மேம்பட்ட வசதிகளை கூகுள் ஏற்படுத்தியுள்ளது.

கூகுள் நிறுவனத்தின் தெற்காசிய பிராந்திய தலைவர் ராஜன் ஆனந்தன் இது தொடர்பாக கூறுகையில், “கடந்த காலாண்டில் 45 சதவிகிதம் பேர் கூகுளில் வேலை வாய்ப்பு தளங்களை தேடியுள்ளனர். இது வரும் காலங்களில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம். எனவே, பயணர்களுக்கு எளிதாக இருக்கும் வண்ணம் சில மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளது” என்றார்.

கணினியில் மட்டுமல்லாது கூகுள் தேடுபொறி மொபைல் ஆப் மூலமாகவும் இந்த புதிய வசதிகளை பெறலாம் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. #Google #JobSeekers
Tags:    

Similar News