செய்திகள்

4 மாத குழந்தையை கற்பழித்துக் கொன்ற காமுகனுக்கு கோர்ட் வளாகத்தில் பொதுமக்கள் தர்ம அடி

Published On 2018-04-21 15:00 GMT   |   Update On 2018-04-21 15:00 GMT
மத்தியபிரதேசம் மாநிலத்தில் 4 மாத குழந்தையை கற்பழித்துக் கொன்ற காமுகனை இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்த அழைத்து வந்தபோது ஆவேசமடைந்த பொதுமக்கள் சரமாரியாக தாக்கினர்.
இந்தூர்:

மத்தியப்பிரதேசம் மாநிலம் இந்தூரில் பெற்றோருடன் தூங்கிக் கொண்டிருந்த குழந்தையை நவீண் காட்கே என்ற காமக் கொடூரன் கடந்த 19-ம் தேதி தூக்கிச் சென்று வன்கொடுமையில் ஈடுபட்டதுடன் இரக்கமின்றி குழந்தையை தலையில் அடித்து கொலை செய்தான்.

அந்த குழந்தையின் பெற்றோர் ஊர் ஊராக சென்று பலூன் விற்கும் தொழில் செய்து பிழைத்து வருகிறார்கள். ராஜ்வாடா பகுதியில் உள்ள கோட்டை திடல் மைதானத்தில் கடந்த வியாழக்கிழமை இவர்கள் தங்கி இருந்தபோது, அந்த குழந்தையின் தாயிடம் வந்த அவரது உறவினரான நவீண் காட்கே என்பவன், தன்னுடன் சண்டை போட்டுகொண்டு பிரிந்து சென்ற மனைவியை சமரசம் செய்து சேர்த்து வைக்குமாறு கூறினான்.

இதற்கு அந்தப் பெண் மறுத்ததால் ஆத்திரம் அடைந்த அந்த காமுகன் அன்றிரவு பெற்றோர் அருகில் தூங்கி கொண்டிருந்த 4 மாத கைக்குழந்தையை தூக்கிச் சென்று வன்கொடுமையில் ஈடுபட்டதுடன் இரக்கமின்றி குழந்தையை தலையில் அடித்து கொன்றான்.

குழந்தையின் பிணம் அங்கு புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்தின் தரை தளத்தில் கிடந்தது. இச்சம்பவம் தொடர்பாக அந்த காமுகனை கைது செய்த போலீசார் இன்று இந்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அப்போது, நீதிபதியின் முன்னர் ஆஜர்படுத்துவதற்கு அழைத்து செல்வதற்கு முன்னரும், திரும்பிவரும்போதும் கோர்ட் வளாகத்தினுள் இருந்த பொதுமக்கள் அந்த காமுகனை சுற்றிவளைத்து சரமாரியாக தாக்கினர்.

சில பெண்கள் செருப்பால் அடிக்க முயன்றனர். அவர்களிடம் இருந்து அவனை காப்பாற்றி அழைத்து செல்வதற்கு போலீசார் மிகவும் சிரமப்பட்டனர்.

இதற்கிடையில், இந்த வழக்கில் நவீண் காட்கேவுக்கு ஆதரவாக எந்த வழக்கறிஞரும் ஆஜராக கூடாது என மத்தியப்பிரதேசம் மாநில வழக்கறிஞர் சங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிகிறது. #tamilnews
Tags:    

Similar News