செய்திகள்

சிபிஎஸ்இ கேள்வித்தாள் வெளியான விவகாரம் - இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த ஆசிரியர் உட்பட 3 பேர் கைது

Published On 2018-04-07 09:31 GMT   |   Update On 2018-04-07 09:31 GMT
சிபிஎஸ்இ 12ம் வகுப்பு வினாத்தாள் வெளியான விவகாரம் தொடர்பாக இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த ஆசிரியர் உட்பட 3 பேர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். #CBSEPaperLeak
புதுடெல்லி:

மத்திய அரசின் பாடத்திட்டத்துக்கு உட்பட்ட சி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வுகள் மார்ச் 5-ம் தேதி தொடங்கியது. 10-ம் வகுப்பு கணிதப் பாடத்திற்கான தேர்வு மார்ச் 28-ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வின் கேள்வித்தாள் வாட்ஸ்-ஆப்பில் வெளியானதான புகார் எழுந்தது. அதே போல், கடந்த மாதம் 26-ம் தேதி நடைபெற்ற 12-ம் வகுப்பிற்கான பொருளாதாரவியல் பாடத்தின் கேள்வித்தாளும் வாட்ஸ்-ஆப்பில் வெளியானதாக கூறப்பட்டது.



இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.



இந்நிலையில், பொருளாதாரவியல் பாடத்தின் கேள்வித்தாளை வெளியிட்டதாக இமாச்சலப்பிரதேசத்தை சேர்ந்த பள்ளி ஆசிரியர், கிளார்க் மற்றும் அவரின் உதவியாளரை போலீசார் இன்று கைது செய்தனர். இவர்கள் வினாத்தாளை கையால் எழுதி வெளியிட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. #CBSEPaperLeak

Tags:    

Similar News