செய்திகள்

லிங்காயத் சமூகத்தினருக்கு மைனாரிட்டி அந்தஸ்து வழங்கியது கர்நாடக அரசு

Published On 2018-03-23 14:03 GMT   |   Update On 2018-03-23 14:03 GMT
கர்நாடகத்தில் லிங்காய்த் சமூகத்தினருக்கு மைனாரிட்டி அந்தஸ்து வழங்கி மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. #Karnatakagovernment #minoritystatus #Lingayatscommunity
பெங்களூரு:

கர்நாடக மாநிலத்தில் லிங்காயத்து சமுதாயத்தினரை தனி மதமாக அங்கீகரித்து சமீபத்தில் கர்நாடக அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. லிங்காயத்து சமுதாயத்தினரை தனி மதமாக அங்கீகரிக்கும்படி மத்திய உள்துறை அமைச்சகதிற்கும் பரிந்துரை செய்துள்ளது.

இந்நிலையில், லிங்காயத் சமூகத்தினருக்கு மைனாரிட்டி அந்தஸ்து வழங்கப்பட்டிருப்பதாக மாநில அரசு இன்று அறிவித்துள்ளது. சிறுபான்மையினர் ஆணைய சட்டத்தின்கீழ், லிங்காயத்தை சிறுபான்மை மதத்தினராக அங்கீகரிக்கலாம் என நாகமோகன் கமிட்டி அளித்த பரிந்துரைகளை ஏற்று, அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பரிந்துரை இறுதி ஒப்புதலுக்காக மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.

மாநில அரசின் இந்த நடவடிக்கைக்கு பா.ஜ.க. எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பா.ஜ.க. வாக்கு வங்கியை குறைப்பதற்கு ஆளும் காங்கிரஸ் கட்சி முயற்சிப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளது.  #tamilnews #Karnatakagovernment #minoritystatus #Lingayatscommunity
Tags:    

Similar News