செய்திகள்

சீன அதிபராக மீண்டும் தேர்வு - தொலைபேசி மூலம் ஜி ஜின்பிங்குக்கு வாழ்த்து தெரிவித்தார் மோடி

Published On 2018-03-20 14:11 GMT   |   Update On 2018-03-20 14:11 GMT
சட்டதிருத்தத்தின் மூலம் சீன அதிபராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ள ஜி ஜின்பிங்-ஐ இன்று தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசிய பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.
பீஜிங்:

சீன அதிபர் பதவியில் ஒரேநபர் இருமுறை மட்டுமே பதவி வகிக்க முடியும் என்ற நிலையில் பாராளுமன்றத்தில் சட்ட திருத்ததின் மூலம் அதிபர் ஜி ஜின்பிங் சமீபத்தில் மீண்டும் அதிபராக தேர்வு செய்யப்பட்டார்.

ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையுடன் ராணுவத்தின் முப்படைகள் உள்பட நாட்டின் அதிகாரங்கள் அனைத்தையும் தன்வசம் வைத்துள்ள ஜி ஜின்பிங் மறைந்த கம்யூனிஸ்ட் தலைவர் மாசே துங்குக்கு அடுத்தபடியாக சீனாவின் மிகவும் சக்திவாய்ந்த தலைவராக உருவெடுத்துள்ளார்.

இந்த தேர்வுக்கு பின்னர் பாராளுமன்றத்தில் இன்று சுமார் அரை மணி நேரம் ஜி ஜின்பிங் காரசாரமாக உரையாற்றினார். என்னிடம் அதிகபட்ச அதிகாரங்கள் குவிந்து கிடந்தாலும் மக்களின் வேலைக்காரனாக எனது கடமைகளை நிறைவேற்றுவேன் என அவர் உறுதி அளித்தார்.

இந்நிலையில், ஜி ஜின்பிங்-ஐ இன்று தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி அவரது ஆட்சிக் காலம் சிறப்பாக அமைய வாழ்த்து தெரிவித்தார்.



இருநாடுகளுக்கு இடையிலான உறவுகள் மேம்பாடு அடையவும், ஆசிய கண்டம் மட்டுமின்றி சர்வதேச விவகாரங்களிலும் தொடர்ந்து இணைந்து செயலாற்றுவோம் என இரு தலைவர்களும் உறுதி ஏற்றதாக சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. #tamilnews
Tags:    

Similar News