செய்திகள்

மாணவியை இழிவுபடுத்தி பேசியதற்கு எதிர்ப்பு- தர்பூசணியால் உடலை மறைத்து பெண்கள் போராட்டம்

Published On 2018-03-20 10:32 GMT   |   Update On 2018-03-20 10:32 GMT
கேரளாவில் கல்லூரி மாணவியை பேராசிரியர் ஒருவர் இழிவுபடுத்தி பேசியதற்கு கேரள பெண்கள் சிலர் தங்கள் உடலை தர்பூசணி பழங்களால் மறைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவனந்தபுரம்:

சமூக வலைதளங்களில் பரபரப்பு ஏற்படுத்தும் வகையில் வீடியோ, புகைப்படங்கள் வெளியாகும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. பொதுமக்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள்.

இதுபோல தற்போது ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த புகைப்படத்தில் இளம்பெண்கள் தங்களின் முகத்தை ஒரு தர்பூசணி பழத்தால் மறைத்தபடி உள்ளனர். மேலும் தர்பூசணி பழத்தை இரண்டாக வெட்டி அதன்மூலம் தங்கள் உடலை மறைத்தபடியும் உள்ள காட்சி அந்த புகைப்படத்தில இடம்பெற்றுள்ளது.

மேலும் ஒரு குரல் பதிவும் அதில் இடம்பெற்றுள்ளது. அந்த குரல் பதிவில் கேரள கல்லூரி மாணவி ஒருவரை அவர் அணிந்துவந்த ஆடை கவர்ச்சியாக இருந்ததால் பேராசிரியர் கண்டிப்பது இடம்பெற்றுள்ளது. அந்த மாணவியை தர்பூசணி பழத்துடன் ஒப்பிட்டு அவர் திட்டுவதும் பதிவாகி உள்ளது.

பெண்ணை தர்பூசணி பழத்துடன் ஒப்பிட்டு பேசுவதா? என்று எதிர்ப்பு தெரிவித்து கேரள பெண்கள் சிலர் தங்கள் உடலை தர்பூசணி பழங்களால் மறைத்து அந்த புகைப்படத்தை இதுபோல வெளியிட்டிருப்பதும் தெரியவந்துள்ளது.

தங்கள் எதிர்ப்பை தெரிவிக்க கேரள பெண்கள் இதுபோன்ற நூதன போராட்டத்தை தொடங்கி உள்ளனர். இந்த செயலுக்கு ஆதரவு குரலும், எதிர்ப்பு குரலும் எழுந்துள்ளது

பெண்களுக்கு ஆதரவாக செயல்படும் அமைப்பை சேர்ந்த சிலர் இதை ஆதரித்து கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகிறார்கள். அதே சமயம் இது ஏற்றுக்கொள்ள தக்க செயல் அல்ல என்று சிலர் கூறிவருவதால் இந்த புகைப்படத்தால் ஏற்பட்ட சர்ச்சை தொடர்ந்து சமூக வலைதளங்களில் நீடித்து வருகிறது. #tamilnews
Tags:    

Similar News