செய்திகள்

பஞ்சாப்பில் 9 பியூன் பதவிக்கு 6 ஆயிரம் பேர் விண்ணப்பம்

Published On 2018-03-20 06:23 GMT   |   Update On 2018-03-20 06:23 GMT
பஞ்சாப் மாநிலம் பதான்டா மாவட்ட நீதிமன்றத்தில் காலியாக உள்ள 9 பியூன் பதவிக்கு மொத்தம் 6,028 பேர் விண்ணப்பித்து உள்ளனர்.
பதான்டா:

பஞ்சாப் மாநிலம் பதான்டா மாவட்ட கோர்ட்டில் பியூன் மற்றும் செயல்முறை சர்வர் பதவி காலியாக இருந்தது.

இதற்கான விண்ணப்பங்களை அளிக்குமாறு மாவட்ட நிர்வாகம் கேட்டு இருந்தது.

மொத்தம் 9 இடங்களுக்கு தான் வேலை இருந்தது. 9 பியூன், செயல்முறை சர்வர் பதவிகளுக்கு மொத்தம் 6,028 பேர் விண்ணப்பித்து உள்ளனர். அந்த அளவுக்கு நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் நிலவுகிறது.

இதற்கான கல்வித்தகுதி 10-ம் வகுப்பு தான். ஆனால் என்ஜினீயரிங் படித்தவர்கள் கூட இந்த பதவிக்காக விண்ணப்பித்து இருக்கிறார்கள். முதுகலை பட்டம் பெற்றவர்கள், டிப்ளமோ படித்தவர்களும் ஆர்வத்துடன் விண்ணப்பித்து உள்ளனர்.

இந்த பதவிக்கான 3 ஆண்டு அடிப்படை சம்பளம் ரூ.4,900 முதல் ரூ.10,680 ஆகும்.

பியூன் பதவிக்கு விண்ணப்பித்த பாட்டியாலாவை சேர்ந்த என்ஜினீயரிங் படித்த அர்ஜுன் குமார் கூறியதாவது:-

நான் எந்த வேலைக்கும் செல்ல தயாராக இருக்கிறேன். எனது குடும்பத்தினருக்கு உதவியாக இருக்கும். எந்த வேலையையும் ஏற்றுக் கொள்வேன்.

இவ்வாறு அவர் கூறினார். #Tamilnews
Tags:    

Similar News