செய்திகள்

பத்ம விருது வெற்றியாளர்களுக்கு இரவு விருந்து அளித்த ராஜ்நாத் சிங்

Published On 2018-03-19 18:17 GMT   |   Update On 2018-03-19 18:17 GMT
2018-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் வெற்றியாளர்களுக்கு நேற்று இரவு, உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் விருந்து அளித்தார். #RajnathSingh #PadmaAwards
புதுடெல்லி:

மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூகசேவை, அறிவியல், பொறியியல், பொது நிர்வாகம். குடியுரிமை பணி, வர்த்தகம், தொழில் துறைகளில் குறிப்பிடத்தக்க அளவில் சாதனை படைத்தவர்களுக்கு ‘பத்ம’ விருதுகளை வழங்கி கவுரவிக்கிறது.

இந்த ஆண்டு 3 பேருக்கு பத்ம விபூஷண், 9 பேருக்கு பத்மபூஷண், 72 பேருக்கு பத்மஸ்ரீ என 84 பேருக்கு ‘பத்ம’ விருதுகள் வழங்கப்படும் என ஜனவரி 25-ந்தேதி அன்று மத்திய அரசு அறிவித்தது.

அறிவிக்கப்பட்டவர்களுக்கு 43 பேருக்கு இன்றும் (20-ம் தேதி), மற்ற 41 பேருக்கு அடுத்த மாதம் 2-ந்தேதியும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பத்ம விருதுகளை வழங்குகிறார்.

இந்நிலையில், இன்று விருதுகள் பெற இருப்பவர்களுக்கு உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், நேற்று இரவு விருந்து அளித்தார். முன்னதாக பத்ம விருது வெற்றியாளர்களைடையே ராஜ்நாத் சிங் உரையாற்றினார். பத்ம விருது வெற்றியாளர்களுக்கு மத்திய உள்துறை மந்திரி விருந்து அளிப்பது இதுவே முதல் முறையாகும்.

இன்று ஜனாதிபதி மாளிகையில் நடைபெறும் விருது வழங்கும் விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வெற்றியாளர்களுக்கு விருது வழங்குகிறார். இந்த விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய மந்திரிகள் கலந்து கொள்ள உள்ளனர். #RajnathSingh #PadmaAwards #tamilnews
Tags:    

Similar News