search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பத்ம விருதுகள்"

    • 5 பேருக்கு பத்ம விபூஷண், 17 பேருக்கு பத்ம பூஷன், 110 பேருக்கு பத்மஸ்ரீ என 132 பேருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
    • கலைத்துறையில் சிறந்த விளங்கியதற்காக மறைந்த நடிகரும், தே.மு.தி.க. தலைவருமான விஜயகாந்துக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய மற்றும் சேவையாற்றியவர்களுக்கு பத்ம விருதுநகள் வழங்கப்படும். பத்ம விருதுகளில் பத்மஸ்ரீ, பத்ம பூஷன் மற்றும் பத்ம விபூஷன் என மூன்று பிரிவுகள் உள்ளன.

    2024-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. 5 பேருக்கு பத்ம விபூஷண், 17 பேருக்கு பத்ம பூஷன், 110 பேருக்கு பத்மஸ்ரீ என 132 பேருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கலைத்துறையில் சிறந்த விளங்கியதற்காக மறைந்த நடிகரும், தே.மு.தி.க. தலைவருமான விஜயகாந்துக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், பத்ம விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளவர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பிரதமர் மோடி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், பத்ம விருதுகள் பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள். பல்வேறு துறைகளில் அவர்களின் பங்களிப்பை இந்தியா மதிக்கிறது. அவர்கள் தங்கள் சிறப்பான பணிகளால் மக்களை ஊக்குவிக்கட்டும் என கூறியுள்ளார்.

    • வைஜெயந்திமாலா, சிரஞ்சீவு, வெங்கையா நாயுடு உள்ளிட்ட ஐந்து பேர் விபூஷன் விருது பெறுகிறார்கள்.
    • விஜயகாந்த் உள்ளிட்ட 17 பேர் பத்ம பூஷன் விருது பெறுகிறார்கள்.

    2024-ம் ஆண்டு குடியரசு தினத்தை முன்னிட்டு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பத்ம விருதுகள் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய மற்றும் சேவையாற்றியவர்களுக்கு வழங்கப்படும். பத்ம விருதுகளில் பத்மஸ்ரீ, பத்ம பூஷன் மற்றும் பத்ம விபூஷன் மூன்று பிரிவுகள் உள்ளன.

    இந்நிலையில் கலைத்துறையில் சிறந்த விளங்கியதற்காக நடிகரும், தே.மு.தி.க. தலைவருமான விஜயகாந்துக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. உடல்நலக்குறைவால் கடந்த டிசம்பர் மாதம் 28-ம்தேதி விஜயகாந்த் காலாமானார்.

    பத்ம விபூஷன் விருது பெறுபவர்களின் விவரம்:-

    1. வைஜெயந்திமாலா- தமிழ்நாடு, 2. சிரஞ்சீவி- ஆந்திரப் பிரதேசம், 3. வெங்கையா நாயுடு - ஆந்திரப் பிரதேசம், 4. ஸ்ரீ பிந்தேஷ்வர் பதக் (மரணத்திற்குப்பின்) - பீகார், 5. பத்மா சுப்ரமணியம்- தமிழ்நாடு

    பத்ம பூஷன் விருது:

    6. விஜயகாந்த் (மரணத்திற்குப் பின்) - தமிழ்நாடு, 7. ஹோர்முஸ்ஜி- மகாராஷ்டிரா, 8. மிதுன் சக்ரவர்த்தி- மேற்கு வங்காளம், 9. சீதாராம் ஜிண்டால்- கர்நாடகா, 10. யங் லியு- தைவான், 11. அஷ்வின் பாலசந்த்- மகாராஷ்டிரா, 12. சத்யபிரதா முகர்ஜி (மரணத்திற்குப் பின்)- மேற்கு வங்காளம், 13. ராம் நாயக் - மகாராஷ்டிரா, 14. தேஜஸ் மதுசூதன் படேல்- குஜராத், 15. ஓலஞ்சேரி ராஜகோபால்- கேரளா, 16. ராஜ்தத்- மஹாராஷ்டிரா, 17. டோக்டன் ஆர்ஹூம்போ) மற்றவை - ஆன்மிகம் - லடாக், 18. பியாரேலால் சர்மா- மகாராஷ்டிரா, 19. சந்திரேஷ்வர் பிரசாத் தாக்கூர்- பீகார், 20. உஷா உதுப்- மேற்கு வங்காளம், 21. பாத்திமா பீவி (மரணத்திற்குப் பின்)- கேரளா, 22. குந்தன் வியாஸ் - மகாராஷ்டிரா

    • இந்திய வரலாறு மற்றும் சமூகப் பிரச்சினைகளை எடுத்துரைத்தவர்.
    • கும்மி நடனத்தில் சிறந்து விளங்கியதற்காகவும், பெண்களுக்கு சிறப்பான பயிற்சி.

    2024ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், தமிழகத்தை சேர்ந்த பத்திரப்பன் என்பவருக்கு கலைப்பிரிவில் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது.

    கோவையை சேர்ந்த வள்ளி ஒயில் கும்மியாட்ட நாட்டுப்புற கலைஞர் பத்ரப்பன் என்பவருக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

    87 வயதான பத்ரப்பன் தனது நடனம் மூலம் இந்திய வரலாறு மற்றும் சமூகப் பிரச்சினைகளை எடுத்துரைத்தவர்.

    கும்மி நடனத்தில் சிறந்து விளங்கியதற்காகவும், பெண்களுக்கு சிறப்பான பயிற்சி அளித்ததற்காகவும் கவுரவிக்கப்படுகிறார்.

    இதில், பத்ரப்பன் உள்பட 34 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

    • 2023-ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.
    • பத்ம விருதுகள் 106 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றாக பத்ம விருது . இந்த விருது ஒவ்வொரு ஆண்டும் பல்துறை சார்ந்த ஆளுமைகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2023-ஆம் ஆண்டிற்கான பத்ம விருது குடியரசு தினத்தையொட்டி 106 பேருக்கு அறிவிக்கப்பட்டது. பத்ம விருது வென்றவர்களுக்கு விருது வழங்கும் விழா டெல்லி ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்று வருகிறது.

    இந்த நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, சபாநாயகர் ஓம் பிர்லா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த பாம்பு பிடி வீரர்களான வடிவேல் கோபால், மாசி சடையனுக்கு குடியரசு தலைவர் திரெளபதி முர்மு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தார்.

    • சமூக நீதிக்காக போராடிய எனது நண்பர் மறைந்த முலாயம் சிங் உள்ளிட்ட 106 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
    • தமிழ்நாட்டில் இருந்து 5 பேர் இந்த விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றனர்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

    சமூக நீதிக்காக போராடிய எனது நண்பர் மறைந்த முலாயம் சிங் உள்ளிட்ட 106 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

    தமிழ்நாட்டில் இருந்து 5 பேர் இந்த விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றனர். விருது பெற்ற அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பத்மபூஷன் விருது பெற்ற பாடகி வாணி ஜெயராம், பத்மஸ்ரீ விருது பெற்ற சமூக சேவகர் பாலம் கல்யாணசுந்தரம், பாம்புபிடி கலைஞர்கள் வடிவேல் கோபால், மாசி சடையன், மருத்துவர் கோபால்சாமி வேலுச்சாமி, நடனக்கலைஞர் கல்யாணசுந்தரம் பிள்ளை ஆகியோர் மேலும் பல விருதுகளை வெல்ல வாழ்த்துகள்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • 2023ம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.
    • ஓஆர்எஸ் கரைசலை கண்டுபிடித்த மருத்துவர் திலீப் மஹாலனாபிஸ்-க்கு பத்ம விபூஷன் விருது

    புதுடெல்லி:

    கலை, இலக்கியம் மற்றும் கல்வி, விளையாட்டு, மருத்துவம் மற்றும் சமூகப் பணி போன்ற பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு மத்திய அரசு ஆண்டு தோறும் பத்ம விருதுகளை வழங்கி கௌரவித்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தன்று விருதுகள் அறிவிக்கப்படும். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகளுக்கு கடந்த மே 1 முதல் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. விண்ணப்பங்கள் மீதான பரிசீலனை முடிவடைந்த நிலையில், 2023ம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை இன்று மத்திய அரசு இன்று அறிவித்தது. 

    தமிழகத்தைச் சேர்ந்த பாம்புபிடி வீரர்களும் சமூக ஆர்வலர்களுமான வடிவேல் கோபால், மாசி சடையன் ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இருளர் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த இவர்கள் இருவரும் பாம்பு பிடிப்பது குறித்து உலக அளவில் பயிற்சி அளித்து வருகின்றனர்.

    மருத்துவத்துறையில் சிறப்பாக சேவையாற்றியதை கவுரவிக்கும் வகையில் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த மருத்துவர் திலீப் மஹாலனாபிஸ்-க்கு பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. இறப்புக்கு பிந்தைய பத்ம விருதாக இது வழங்கப்படுகிறது. ஓஆர்எஸ் கரைசலை கண்டுபிடித்த இவர், உலகம் முழுவதும் 5 கோடிக்கும் அதிகமான உயிர்களை காப்பாற்றியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    1971-ம் ஆண்டு வங்காளதேசத்தில் நடைபெற்ற விடுதலைப் போரின்போது, அகதிகள் முகாமில் இவர் பணியாற்றி வந்தார். அப்பகுதியில் வேகமாகக் காலரா பரவி மக்களை அச்சுறுத்தி வந்தது. அந்நேரம், டாக்டர் திலீப், ஓ.ஆர்.எஸ். கரைசலை கொடுத்து ஆயிரக்கணக்கான மக்களின் உயிர்களைக் காப்பாற்றினார்.

    • ஆன்லைன் வழியில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
    • இந்த விருதுகளுக்கான விதிகள் குறித்து இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

    பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு மத்திய அரசு ஆண்டு தோறும் பத்ம விருதுகளை வழங்கி கௌரவித்து வருகிறது. அடுத்த ஆண்டுக்கான பத்ம விருதுகளுக்கு கடந்த மே 1 முதல் விண்ணப்பிக்கலாம் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்திருந்தது.

    பத்ம விருதுகளுக்கு https://awards.gov.in என்ற முகவரியில் உள்ள தேசிய விருதுகளுக்கான இணையதளத்தில் ஆன்லைன் வழியில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இந்த விருதுகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணையதளத்தில் விருதுகள் மற்றும் பதக்கங்கள் பகுதியிலும், பத்ம விருதுகளுக்கான இணையதளத்திலும் தெரிந்துகொள்ளலாம்.

    இந்த விருதுகளுக்கான சட்டங்கள் மற்றும் விதிகள் குறித்து https://padmaawards.gov.in/AboutAwards.aspx என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். அடுத்த குடியரசு தினத்தன்று விருதுகள் அறிவிக்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்.

    • குறிப்பிடத்தக்க மற்றும் அசாதாரணமான பணிகளைச் செய்தவா்களுக்கு குடியரசு தின விழாவின்போது பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன.
    • தோ்வு செய்யப்படும் விண்ணப்பங்கள் மாவட்ட கலெக்டரின் பரிந்துரைகளுடன் அரசுக்கு அனுப்பி வைக்கப்படும்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது-

    மத்திய அரசு 2023- ம் ஆண்டு ஜனவரியில் பத்ம விருதுகள்(பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்ம ஸ்ரீ) ஆகிய விருதுகளை வழங்க உள்ளது. கலை, அறிவியல், இலக்கியம், விளையாட்டு, மருத்துவம், கல்வி, தொழில்நுட்பம், சமூக நலன், பொதுப்பணிகள், தொழில் மற்றும் இதர பிரிவுகளில் மிகவும் குறிப்பிடத்தக்க மற்றும் அசாதாரணமான பணிகளைச் செய்தவா்களுக்கு குடியரசு தின விழாவின்போது பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன.

    இவ்விருதுகள் தொழில், இனம், உத்தியோகம், பாலினம் ஆகியவற்றுக்கு வித்தியாசமின்றி வழங்கப்படுகிறது. மேலும் விவரங்களை அறிய மத்திய அரசு இணையதளத்தை காணலாம். பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வருகிற 15-ம் தேதிக்குள் தகுதியுடையோா் நாமக்கல் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலருக்கு அனுப்பி வைக்க வேண்டும். தோ்வு செய்யப்படும் விண்ணப்பங்கள் மாவட்ட கலெக்டரின் பரிந்துரைகளுடன் அரசுக்கு அனுப்பி வைக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    மக்கள் தங்களுடைய பரிந்துரைகளை https://awards.gov.in/ என்ற இணையதள முகவரியில் பதிவேற்றம் செய்யலாம்.
    புதுடெல்லி:

    இந்தியாவில் வழங்கப்படும் உயரிய விருதான பாரத ரத்னாவிற்கு அடுத்த நிலையில் பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்மஸ்ரீ ஆகிய பத்ம விருதுகள் உள்ளன. 

    இந்தியாவில் அரசியல், சமூகம், நிர்வாகம், கலை, கலாச்சாரம், சினிமா, பொது சேவை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்த முறையில் பணியாற்றியவர்களைக் கண்டறிந்து ஆண்டுதோறும் இந்த விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. 

    இந்நிலையில் 2023-ம் ஆண்டு வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான பரிந்துரைகளை இணையத்தில் பதிவேற்றம் செய்யலாம் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

    இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வரும் செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் மக்கள் தங்களுடைய பரிந்துரைகளை https://awards.gov.in/ என்ற இணையதள முகவரியில் பதிவேற்றம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    ×