செய்திகள்

மோடி அரசுக்கும் நம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கும் ஆதரவு இல்லை - சிவசேனா அறிவிப்பு

Published On 2018-03-19 09:00 GMT   |   Update On 2018-03-19 09:00 GMT
மத்திய அரசுக்கும், நம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கும் ஆதரவு இல்லை என்று சிவசேனா எம்.பி. ராவத் கூறினார்.
புதுடெல்லி:

ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து கொடுக்க மத்திய அரசு மறுத்து விட்டதால் பா.ஜனதா கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் விலகியது.

அதோடு மோடி அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர கடிதம் கொடுத்து இருந்தது. இதேபோல ஒய்.எஸ்.ஆர். காங்கிரசும் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருகிறது.

பாராளுமன்றத்தில் இன்று நடந்த அமளி காரணமாக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்படவில்லை.



இந்த நிலையில் மத்திய அரசுக்கும், நம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கும் ஆதரவு அளிக்க போவது இல்லை என்று சிவசேனா அறிவித்து உள்ளது.

இதுதொடர்பாக சிவசேனா எம்.பி. ராவத் கூறும்போது, “தெலுங்கு தேசம் முடிவை வரவேற்கிறேன். அதே நேரத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை ஆதரிக்க மாட்டோம். மத்திய அரசையும் ஆதரிக்க மாட்டோம்” என்றார். #tamilnews

Tags:    

Similar News