செய்திகள்

மிருககாட்சி சாலையில் உள்ள அனகோண்டாவுக்கு குளிர்சாதன வசதி

Published On 2018-03-19 04:49 GMT   |   Update On 2018-03-19 04:49 GMT
கேரளாவில் தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் மிருககாட்சி சாலையில் உள்ள அனகோண்டாவுக்கு குளிர்சாதன வசதி செய்யப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம்:

திருவனந்தபுரத்தில் 36 ஏக்கர் பரப்பளவில் மிருககாட்சி சாலை அமைந்துள்ளது. இங்கு இயற்கை சூழ்நிலையில் யானை, காட்டுஎருமை, வரிக்குதிரை, நீர்யானை, சிங்கம், சிறுத்தை, புலி போன்ற விலங்குகள் உள்ளன. மேலும் ஏராளமான பறவை இனங்களும், மான்களும் பராமரிக்கப்பட்டு வருகிறது.

மேலும் இந்த மிருக காட்சி சாலையில் தனியாக பாம்பு காட்சி சாலையும் செயல்பட்டு வருகிறது. இங்கு அபூர்வ அனகோண்டா பாம்பு, ராஜ நாகம் உள்பட பல்வேறு பாம்புகள் உள்ளது. கேரளாவில் தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. அதனால் இப்போதே மாநிலத்தின் பல இடங்களில் வெயில் சுட்டெரித்து வருகிறது. வெயிலின் தாக்கத்தில் இருந்து மிருககாட்சி சாலையில் உள்ள மிருகங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

இதைத்தொடர்ந்து பூங்காவில் இருக்கும் விலங்குகள், பறவைகளை காக்க தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் குழாய்கள் பொருத்தப்பட்டு உள்ளன. மேலும் தண்ணீர் நிரப்பிய தொட்டிகளும் புதிதாக அமைக்கப்பட்டு உள்ளது. அனகோண்டா பாம்புக்கு குளிர்சாதன வசதி செய்யப்பட்டு உள்ளது. மேலும் விலங்குகள் உள்ள கூண்டுகளுக்கு ஏர்கூலர், மின்விசிறி வசதியும் செய்யப்பட்டு உள்ளது.

அதிக நீர்சத்து உள்ள பழங்கள், உணவுகள் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. #Tamilnews

Tags:    

Similar News