search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Anaconda"

    • சந்தேகமடைந்த சுங்க இலாகா அதிகாரிகள் அந்த சூட்கேசை திறந்து பார்த்தனர்.
    • நபரிடம் இந்த பாம்பு குட்டிகள் எதற்காக கடத்தி வரப்பட்டது என்று தீவிர விசாரணை நடத்தினர்.

    பெங்களூர்:

    கர்நாடக மாநிலம் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் சுங்க இலாகா அதிகாரிகள் பயணிகளின் உடமைகளை சோதனை செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது பாங்காக்கில் இருந்து பெங்களூருக்கு வந்த ஒரு பயணி ஒரு பெரிய சூட்கேசை கொண்டு வந்தார். சந்தேகமடைந்த சுங்க இலாகா அதிகாரிகள் அந்த சூட்கேசை திறந்து பார்த்தனர்.அப்போது அதில் வெள்ளி நிற பைகள் இருந்தது. இதையடுத்து அந்த பைகளை பிரித்து பார்த்தனர். அப்போது அதில் 10 அனகோண்டா பாம்பு குட்டிகள் இருப்பது தெரியவந்தது.



    இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் சூட்கேசை கொண்டு வந்த நபரிடம் இந்த பாம்பு குட்டிகள் எதற்காக கடத்தி வரப்பட்டது என்று தீவிர விசாரணை நடத்தினர்.

    மேலும் இது குறித்து வனத்துறை தகவல் தெரிவித்தனர். அவர்கள் 10 அனகோண்டா பாம்பு குட்டிகளை பறிமுதல் செய்து, பாம்புகளை கடத்தி வந்த நபர் மீது வனவிலங்கு கடத்தல் பிரிவு மற்றும் சுங்க இலாகா சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வீடியோவில் நீருக்கு அடியில் சுமார் 26 அடி நீளம் கொண்ட அனகோண்டாவின் தலை முதல் வால் வரை காட்டுகிறார்.
    • ஒரு கார் டயர் போன்ற தடிமன், சுமார் 8 மீட்டர் நீளம் மற்றும் 200 கிலோவுக்கு மேல் எடை மற்றும் பெரிய தலையுடன் காணப்படுகிறது.

    அமேசான் மலைக்காடுகள் உலகின் மிகப்பெரிய தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் இருப்பிடம் ஆகும். இங்கு விஞ்ஞானிகள் நடத்தி வரும் ஆய்வில் புதுப்புது தகவல்கள் வெளியாகி வருகிறது.

    இந்நிலையில் அமேசான் காட்டில் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் விஞ்ஞானிகளில் ஒருவரான ப்ரீக் வோங்க் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகப்பெரிய அனகோண்டா பாம்பின் வீடியோவை பகிர்ந்துள்ளார். அதில் நீருக்கு அடியில் சுமார் 26 அடி நீளம் கொண்ட அனகோண்டாவின் தலை முதல் வால் வரை காட்டுகிறார்.

    அதனுடன், நான் பார்த்த மிகப்பெரிய அனகோண்டாவை வீடியோவில் நீங்கள் பார்க்கலாம். ஒரு கார் டயர் போன்ற தடிமன், சுமார் 8 மீட்டர் நீளம் மற்றும் 200 கிலோவுக்கு மேல் எடை மற்றும் பெரிய தலையுடன் காணப்படுகிறது. நான் இதற்கு முன்பு ஒரு பெரிய இனத்தை கண்டுபிடித்தேன். அது ஆஸ்திரேலியாவில் இருந்து வந்த ஒரு சிறிய பாம்பு. ஆனால், இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருப்பது உலகிலேயே மிகப்பெரிய பாம்பு என தெரிவித்துள்ளார்.


    ×