செய்திகள்

எதிர்க்கட்சி தலைவர்களுக்கு விருந்து அளித்தார் சோனியா காந்தி

Published On 2018-03-13 18:28 GMT   |   Update On 2018-03-13 18:28 GMT
ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி டெல்லியில் உள்ள தனது வீட்டில் வைத்து எதிர்கட்சி தலைவர்களுக்கு இன்று விருந்தளித்தார். #SoniaGandhi #INC #Dinnerforopposition
புதுடெல்லி:

மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பா.ஜ.க. தலைமையிலான அரசு ஆட்சி நடத்தி வருகிறது. அடுத்த ஆண்டுடன் பா.ஜ.க. ஆட்சி முடிவடைய உள்ளது.

இதையடுத்து, 2019-ல் நடக்கவுள்ள பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்காகவும், பா.ஜ.க. ஆட்சியை அகற்றுவதற்காகவும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

அதன் ஒரு பகுதியாக, காங்கிரஸ் சார்பில் டெல்லியில் எண் 10, ஜன்பத் சாலையில் உள்ள சோனியா காந்தி வீட்டில் இன்று நடைபெற உள்ள இரவு விருந்தில் கலந்து கொள்ள வேண்டும் என எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.



அவரது அழைப்பை ஏற்று தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார், லாலு மகன் தேஜஸ்வி யாதவ், சமாஜ்வாதி கட்சியின் ராம்கோபால் யாதவ், பகுஜன் சமாஜ் கட்சியின் சதிஷ் மிஷ்ரா, ஜனதா தளம் தலைவர் சரத் யாதவ், பீகார் முன்னாள் முதல் மந்திரி ஜித்தன் ராம் மஞ்சி, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல் மந்திரி ஒமர் அப்துல்லா, ஜார்க்கண்ட் முன்னாள் முதல் மந்திரி பாபுலால் மராண்டி, தி.மு.க.வின் கனிமொழி, சிபிஐ (எம்) கட்சியின் ராஜா உள்ளிட்ட 20 எதிர்கட்சிகளை சேர்ந்த பிரமுகர்கள் இந்த விருந்தில் கலந்துகொண்டனர்.

காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரும் இந்த விருந்தில் கலந்துகொண்டனர். #SoniaGandhi #INC #Dinnerforopposition #tamilnews
Tags:    

Similar News