செய்திகள்

வங்கி மோசடிகளில் தமிழகம் முதலிடம் - ரிசர்வ் வங்கி தகவல்

Published On 2018-03-03 06:36 GMT   |   Update On 2018-03-03 06:36 GMT
தமிழகத்தில் அதிகாரிகள் துணையோடு நடந்துள்ள வங்கி மோசடிகளால் ரூ.2,450 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. 170 வழக்குகள் பதியப்பட்டு தமிழகம் முதலிடத்தில் உள்ளது. #Reservebank
மும்பை:

வங்கிகளில் பல ஆயிரம் கோடி கடன் வாங்கிவிட்டு அதை திருப்பி செலுத்தாமல் தொழில் அதிபர்கள் வெளிநாட்டுக்கு தப்பி செல்லும் சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

கிங் பி‌ஷர் நிறுவன அதிபர் விஜய்மல்லையா ரூ.9 ஆயிரம் கோடியும், வைர வியாபாரி நிரவ் மோடி ரூ.11,400 கோடியும் வங்கிகளில் கடன் வாங்கி மோசடி செய்துவிட்டு வெளி நாட்டுக்கு தப்பி விட்டனர்.

இந்த மோசடிக்கு வங்கி அதிகாரிகளே உடந்தையாக இருந்துள்ளனர். பெறும் தொழில் அதிபர்களுக்கு முறையான ஆவணங்கள் இல்லாமலும், போலியான பாதுகாப்பு ஆவணங்களும் கொடுத்து முறைகேடுக்கு துணை போய் இருக்கிறார்கள்.



வைர வியாபாரி நிரவ் மோடி மோசடி வழக்கில் வங்கி அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையே பல ஆண்டுகளாக வங்கி அதிகாரிகள் முறைகேட்டில் ஈடுபட்டு கொண்டிருப்பது தெரிய வந்துள்ளது. இது ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிய வந்து இருக்கிறது.

2013-ம் ஆண்டு ஏப்ரல் முதல் 2018-ம் ஆண்டு ஜூன் மாதம் வரை நாடு முழுவதும் 1232 வங்கி மோசடி வழக்கு பதியப்பட்டு இருக்கிறது.

இது வங்கி அதிகாரிகள் துணையோடு நடந்துள்ள மோசடிகள் அதனால் ரூ.2,450 கோடி இழப்பு ஏற்பட்டு உள்ளது.

தென் மாநிலங்கள் மற்றும் மகாராஷ்டிராவில் மட்டும் 609 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.

இதில் தமிழகத்தில் 170 வழக்குகள் பதியப்பட்டு முதலிடத்தில் உள்ளது. ரூ.83 கோடி மோசடி நடந்துள்ளது. அடுத்து ஆந்திராவில் 157 வழக்கும், கர்நாடகாவில் 125 வழக்கும், மகாராஷ்டிராவில் 107 வழக்கும் இருக்கிறது. ராஜஸ்தானில் 38 வழக்குகள் பதிந்து இருந்தாலும் அதிகப் பட்சமாக ரூ.1096 கோடி மோசடி செய்யப்பட்டு இருக்கிறது.

தென் மாநிலங்களில் பொது மக்களின் டெபாசிட் கணக்கில் மோசடி செய்துள்ளனர். அதனால் மோசடி தொகை குறைவாக இருக்கிறது.

தென் இந்தியாவில் வங்கி கிளைகள் அதிகம் இருப்பதால் மோசடி புகார்களும் அதிகளவில் வந்து உள்ளது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார். #Reservebank #tamilnews
Tags:    

Similar News