செய்திகள்

விக்ரம் கோத்தாரி மீது சட்ட விரோத பணப்பறிமாற்றம் செய்ததாக அமலாக்கத்துறை வழக்கு

Published On 2018-02-19 11:58 GMT   |   Update On 2018-02-19 11:58 GMT
பல்வேறு பொதுத்துறை வங்கிகளில் கடன் பெற்று மோசடி செய்த ரோட்டோமேக் உரிமையாளர் விக்ரம் கோத்தாரி மீது சட்டவிரோத பணப்பறிமாற்றம் செய்ததாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. #VikramKothari
புதுடெல்லி:

உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள ரோட்டாமேக் பேனா தொழிற்சாலையின் உரிமையாளர் விக்ரம் கோத்தாரி மும்பையில் உள்ள யூனியன் பேங்க் ஆப் இந்தியா, கொல்கத்தாவில் உள்ள அலகாபாத் வங்கி, பேங்க் ஆப் இந்தியா, பேங்க் ஆப் பரோடா, இந்தியன் ஓவர்சீஸ் பேங்க் உள்பட 5-க்கும் மேற்பட்ட வங்கிகளில் ரூ.800 கோடிக்கும் மேல் கடன் வாங்கி இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பேங்க் ஆப் பரோடா அளித்த புகாரின் அடிப்படையில் விக்ரம் கோத்தாரி மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரணையை நடத்தி வருகிறது. முதற்கட்டமாக கான்பூரில் உள்ள அவரது வீடு உள்ளிட்ட மூன்று இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர். 

கோத்தாரி, அவரது மனைவி மற்றும் மகனிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் துருவித் துருவி விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையின் முடிவில் கோத்தாரி கைது செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன. 

இந்நிலையில், சட்டவிரோதமாக பணப்பறிமாற்றம் செய்ததாக அவர் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. அவரது குடும்பத்திர் மற்றும் நிறுவன பங்குதாரர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
#VikramKothari | #EnforcementDirectorate | #MoneyLaundering | #TamilNews
Tags:    

Similar News