செய்திகள்

தேசிய வாழை திருவிழா - கேரளாவில் கோலாகலம்

Published On 2018-02-19 09:04 GMT   |   Update On 2018-02-19 09:04 GMT
கேரளாவில் தேசிய வாழை திருவிழாவை ஒட்டி பல விதமான வாழைப்பழங்கள் மற்றும் வாழை உணவுகள் காட்சிக்கு வைக்கப்பட்டன.
திருவனந்தபுரம்:

தேசிய வாழை திருவிழா ஆண்டுதோறும் கேரளாவில் உள்ள கள்ளியூர் பகுதியில் கொண்டாடப்பட்டு வருகிறது. 5 நாட்கள் நடைபெறும் விழாவை மத்திய வேளாண் துறை மந்திரி ராதா மோகன் சிங் தொடங்கி வைத்தார். இந்த விழாவில் பல வகையான வாழைப்பழ ரகங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டன.

வாழைகள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படும் கேரளாவில் இந்த விழாவானது வாழை சாகுபடியை ஊக்கும்விக்கும் வகையில் கொண்டாடப்படுகிறது.



இந்த விழாவிற்கு 65 ஆயிரத்திற்கும் அதிகமான பார்வையாளர்கள் வந்து பார்வையிட்டனர். மேலும் வாழைப்பழம், வாழைத் தண்டு மற்றும் அதன் அனைத்து பாகங்களாலும் தயாரிக்கப்பட்ட உணவு வகைகளை மக்கள் சுவைத்து மகிழ்ந்தனர். இந்த விழாவில் விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் அனைத்து கருவிகள் மற்றும் பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டன. #tamilnews
 

Tags:    

Similar News