செய்திகள்

திருப்பதி கோவிலில் காணிக்கை தலைமுடி மூலம் 7 ஆண்டில் ரூ.1,125 கோடி வருவாய்

Published On 2018-02-18 06:42 GMT   |   Update On 2018-02-18 06:42 GMT
திருப்பதி கோவிலில் கடந்த 7 ஆண்டுகளில் காணிக்கை தலைமுடி ஏலம் விட்டதால் ரூ.1,125 கோடி வருமானம் கிடைத்து இருக்கிறது.
நகரி:

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்கிறார்கள். மேலும் தலைமுடியை காணிக்கையாக செலுத்துகிறார்கள்.

மாதம் 9.80 லட்சம் பேர் தலைமுடி காணிக்கையாக செலுத்துகிறார்கள். ஆண்டுக்கு சுமார் 120 கோடி பக்தர்கள் காணிக்கையாக தருகிறார்கள்.

பக்தர்களின் தலை முடிகள் இ-டென்டர் மூலம் ஏலம் விடப்படுகிறது. காணிக்கை தலைமுடியை 3 நாட்கள் வெயிலில் காய வைத்து அதன்பின் தரம், ரகம் வாரியாக பிரித்து ஏலம் விடப்படும். அதன் மூலம் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு கோடிக் கணக்கில் வருமானம் கிடைக்கிறது. கடந்த மாதம் 50 டன் தலைமுடியை ஏலம் விட்டதில் ரூ.25.33 கோடி கிடைத்தது.

கடந்த காலங்களில் காணிக்கை தலைமுடி ஏலக் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் கலந்து கொண்டவர்கள் தங்களுக்குள் பேசி வைத்து கொண்டு ஏலத்தொகையை குறைத்து கேட்டுவாங்கினர்.

இதையடுத்து இ-டென்டர் ஏலம் முறை கொண்டு வரப்பட்ட பிறகு தலைமுடி மூலம் கிடைக்கும் வருமானம் அதிகரித்தது.

கடந்த 7 ஆண்டுகளில் காணிக்கை தலைமுடி ஏலம் விட்டதால் ரூ.1,125 கோடி வருமானம் கிடைத்து இருக்கிறது. #tamilnews

Tags:    

Similar News