செய்திகள்

தேர்தல் கமிஷனர்களுக்கு 2 மடங்கு சம்பள உயர்வு

Published On 2018-02-15 02:02 GMT   |   Update On 2018-02-15 02:02 GMT
தலைமை தேர்தல் கமிஷனர் மற்றும் 2 தேர்தல் கமிஷனர்களின் சம்பளம் ரூ.90 ஆயிரத்தில் இருந்து ரூ.2½ லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
புதுடெல்லி:

சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டு நீதிபதிகள் சம்பளம், கடந்த மாதம் 25-ந் தேதி உயர்த்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, தேர்தல் கமிஷனர்கள் சம்பளமும் உயர்த்தப்பட்டுள்ளது.

தேர்தல் கமிஷனர்கள், சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியின் சம்பளத்துக்கு இணையான சம்பளம் பெற தகுதி பெற்றவர்கள் என்று தேர்தல் கமிஷனர்கள் பணி விதிமுறைகள் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

அதன்படி, சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி சம்பளத்தை போலவே, தலைமை தேர்தல் கமிஷனர் மற்றும் 2 தேர்தல் கமிஷனர்களின் சம்பளம், ரூ.90 ஆயிரத்தில் இருந்து ரூ.2½ லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதியில் இருந்து இந்த சம்பள உயர்வு அமல்படுத்தப்படுகிறது.

ஓய்வுபெற்ற தலைமை தேர்தல் கமிஷனர்கள் மற்றும் ஓய்வுபெற்ற தேர்தல் கமிஷனர்களுக்கும் இது பொருந்தும். 
Tags:    

Similar News