செய்திகள்

காளஹஸ்தி அருகே லாரி - ஆட்டோ மோதி 5 பக்தர்கள் பலி

Published On 2018-02-13 08:22 GMT   |   Update On 2018-02-13 08:22 GMT
காளஹஸ்தி அருகே லாரி-ஆட்டோ மோதி 5 பக்தர்கள் பலியாகினர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் 5 பேர் உடலையும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.
காளஹஸ்தி:

காளஹஸ்தி கோவிலில் சிவராத்திரியை முன்னிட்டு பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது.

மேலும் சிவராத்திரியான இன்று கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

ஆந்திர மாநிலம் கோதாவரி மாவட்டம் பாலகொல்லு கிராமத்தை சேர்ந்த தம்பதியான ராமராவ் (வயது50), குமாரி (47), சித்தூர் மாவட்டம் யாதமரியை சேர்ந்த ஆனந்த் (16), பிந்து (18) உள்பட 7 பேர் இன்று அதிகாலை கோவிலில் தரிசனம் செய்துவிட்டு ஷேர் ஆட்டோவில் ஊருக்கு திரும்பினர்.

ஷேர் ஆட்டோவை வெங்கட்ரமணா (43) என்பவர் ஓட்டிவந்தார். ஆட்டோ பி.என். கண்டிரிகா சர்க்கரை ஆலை அருகே வந்தபோது எதிரே வந்த டிப்பர் லாரி ஆட்டோ மீது பயங்கரமாக மோதியது. இதில் ஆட்டோவில் இருந்த 8 பேரும் தூக்கிவீசப்பட்டு படுகாயமடைந்தனர்.

இதில் ராமராவ், குமாரி, ஆனந்த், பிந்து, ஆட்டோ டிரைவர் வெங்கட்ரமணா ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

காயமடைந்தவர்களின் அலறல் சத்தம் கேட்டு அருகில் உள்ளவர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

படுகாயமடைந்த 3 பேரை மீட்டு காளஹஸ்தி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பலியான 5 பேர் உடலையும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.

மேலும் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
Tags:    

Similar News