செய்திகள்

பெண் குழந்தைகளின் கல்விக்கு உதவ மலாலாவுடன் இணைந்தது ஆப்பிள் நிறுவனம்

Published On 2018-01-23 00:15 GMT   |   Update On 2018-01-23 00:15 GMT
உலகெங்கும் உள்ள பெண்களின் கல்விக்கு உதவுவதற்காக மலாலாவுடன் இணைந்து நிதி திரட்ட ஆப்பிள் நிறுவனம் முடிவெடுத்துள்ளது. #Apple #MalalaYousafzai #GirlsEducationFund
புதுடெல்லி:

உலகில் உள்ள பெண்களின் கல்விக்கு நிதி திரட்டும் திட்டத்திற்காக 2014-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசை பெற்ற பாகிஸ்தானை சேர்ந்த மலாலாவுடன் ஆப்பிள் நிறுவனம் இணைந்துள்ளது.

உலகெங்கும் உள்ள பெண்களின் கல்வித்தரத்தை உயர்த்த அமைதிக்கான நோபல் பரிசு வென்ற மலாலா நிதி திரட்டி வருகிறார். இந்த முயற்சியில் தற்போது உலகப்புகழ்பெற்ற ஐபோன் தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள் இணைந்துள்ளது. இந்த திட்டத்தில் ஆப்பிள் இணைந்துள்ளதால் அதிக அளவிலான நிதி குவியும் என எதிர்பார்க்கப்படுகிறது.



இது குறித்து மலாலா செய்தியாளர்களிடம் கூறுகையில், உலகில் உள்ள ஒவ்வொரு பெண்ணும் தங்களது எதிர்காலத்தை தாங்களே தேர்வு செய்து கொள்ள வேண்டும் என்பதே எனது ஆசை. ஆப்பிள் நிறுவனத்தின் புதிய கண்டுபிடிப்புகள், தொண்டுகள் ஆகியவற்றின் மூலம் உலகில் உள்ள மக்களுக்கு கல்வி மற்றும் அதிகாரத்தை அளித்து உதவி வருகிறது. பெண்களுக்காக நிதி வழங்குவதன் மதிப்பை ஆப்பிள் நிறுவனம் தெரிந்து முன்வந்ததற்கு எனது நன்றி' என கூறினார்.

மலாலாவில் இந்த திட்டத்தால் இந்தியா மட்டுமின்றி ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், லெபனான், துருக்கி, நைஜீரியா உள்பட பல நாடுகளின் பெண்கள் பயன்பெறுவார்கள் என கூறப்படுகிறது. #Apple #MalalaYousafzai #GirlsEducationFund #tamilnews
Tags:    

Similar News