செய்திகள்

தவறான விளம்பரங்களில் பிரபலங்கள் நடிக்க தடை

Published On 2018-01-06 05:27 GMT   |   Update On 2018-01-06 05:27 GMT
தவறான விளம்பரங்களில் பிரபலங்கள் நடித்தால் 3 ஆண்டுகள் விளம்பரங்களில் ஈடுபடக்கூடாது என்ற புதிய மசோதாவுக்கு பாராளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
புதுடெல்லி:

பிரபலங்கள் விளம்பரங்கள் மூலம் கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்கிறார்கள். நடிகர், நடிகைகள், கிரிக்கெட் வீரர்கள் தான் பெரும் பாலும் விளம்பரங்களில் ஒப்பந்தமாகுகிறார்கள்.

பல விளம்பரங்கள் தவறாக வருகின்றன. இதனால் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். நுகர்வோர்களை பாதுகாக்க மத்திய அரசு முடிவு செய்து புதிய சட்டம் ஒன்றை கொண்டு வர திட்டமிட்டது.

இது குறித்து ஆராய பாராளுமன்ற குழுவுக்கு உத்தரவிடப்பட்டது. தவறான விளம்பரங்களால் நுகர்வோர்கள் பாதிக்கப்படுவது குறித்து அந்த குழு ஆய்வு செய்து அறிக்கை கொடுத்தது.

அதன்படி மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை மந்திரி ராம்விலாஸ் பஸ்வான நுகர்வோர் பாதுகாப்பு குறித்த புதிய மசோதாவை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.

இந்த புதிய சட்டத்தின்படி தவறான விளம்பரங்களில் நடிக்கும் பிரபலங்களுக்கு 3 ஆண்டு தடை விதிக்கப்படும். அதாவது தவறான விளம்பரங்களில் ஒப்பந்தம் ஆகி இருந்தால் அடுத்த 3 ஆண்டுகளுக்கு அவர்கள் விளம்பரங்களில் ஈடுபடக்கூடாது. மேலும் ரூ.50 லட்சம் அபராதமும் விதிக்கப்படும். இந்த புதிய மசோதாவுக்கு பாராளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

அதே நேரத்தில் தவறான விளம்பரங்களில் ஈடுபடும் பிரபலங்களுக்கு ஜெயில் தண்டனை விதிக்க வேண்டும் என்ற பாராளுமன்ற குழுவின் பரிந்துரையை மத்திய அரசு ஏற்றுக்கொள்ளவில்லை. #tamilnews
Tags:    

Similar News