செய்திகள்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை முதல் ஆர்ஜித சேவைகள் மீண்டும் தொடக்கம்

Published On 2018-01-01 12:51 GMT   |   Update On 2018-01-01 12:51 GMT
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசி, துவாதசி மற்றும் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு ரத்து செய்யப்பட்டிருந்த அனைத்து ஆர்ஜித சேவைகளும் நாளை முதல் தொடர்ந்து நடைபெறும்.
திருமலை: 

ஆந்திர மாநிலம், திருமலையில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு இந்த ஆண்டு கூடுதலாக 40 ஆயிரம் பக்தர்கள் வந்தனர். வைகுண்ட ஏகாதசி தினத்தன்று ஒருநாள் மட்டும் 74 ஆயிரத்து 144 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். துவாதசி தரிசனத்தில் 75 ஆயிரத்து 658 பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். மொத்தம் 1.50 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.

புத்தாண்டு தினத்தையொட்டி இன்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். முன்னதாக, வைகுண்ட ஏகாதசி, துவாதசி மற்றும் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு அனைத்து ஆர்ஜித சேவைகளும் ரத்து செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், நாளை (இரண்டாம் தேதி) முதல் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அனைத்து ஆர்ஜித சேவைகளும் தொடர்ந்து நடைபெறும். நாளைய பவுர்ணமி தின கருட சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது என திருப்பதி - திருமலை தேவஸ்தானம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #tamilnews #Tirumalatemple #arjithaseva

Tags:    

Similar News