செய்திகள்

துபாயில் இருந்து பார்சல் மூலம் கடத்தல் - மும்பை விமான நிலையத்தில் 10 கிலோ தங்கம் பறிமுதல்

Published On 2017-12-28 20:58 GMT   |   Update On 2017-12-28 20:58 GMT
மும்பை விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து பார்சல் மூலம் கடத்தி கொண்டுவரப்பட்ட 10 கிலோ தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மும்பை:

மும்பை விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து பார்சல்களில் தங்கம் கடத்தி வரப்பட்டுள்ளதாக வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அதிகாரிகள் அங்கு சென்று பார்சல்களை பிரித்து சோதனை நடத்தினர். அப்போது, பைப்புகள், உபகரணங்கள் இருந்த பார்சல்களில் 10 கிலோ எடையுள்ள தங்க கட்டிகள் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

பின்னர் பார்சலில் குறிப்பிடப்பட்டு இருந்த முகவரியை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது அந்த பார்சல் மாட்டுங்காவை சேர்ந்த மெக்கானிக்கல் என்ஜினீயர் மங்கேஷ் மிஸ்திரி பெயரில் வந்து இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து மும்பையில் உள்ள அவரது வீடுகளில் வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் ரூ.25 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு பணம் கைப்பற்றப்பட்டது. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து மங்கேஷ் மிஸ்திரியை கைது செய்தனர். இவருக்கு உடந்தையாக இருந்த யூசுப்பை வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தேடி வருகின்றனர். 
Tags:    

Similar News