செய்திகள்

டெல்லி: ரெயில்வே சலவையகத்தில் பாய்லர் வெடித்து தொழிலாளி பலி

Published On 2017-12-24 13:21 GMT   |   Update On 2017-12-24 13:21 GMT
டெல்லியில் ரெயில்வே துறைக்கு சொந்தமான துணிகளை சலவை செய்யும் நிலையத்தில் இன்று கொதிகலன் வெடித்த விபத்தில் தொழிலாளி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
புதுடெல்லி:

தொலைதூர ரெயில்களின் முதல் வகுப்பு மற்றும் ஏ.சி. பெட்டிகளில் பயன்படுத்தப்படும் போர்வை, தலையணை உறைகள் போன்றவற்றை சலவை செய்வதற்கு ரெயில்வே துறையின் சார்பில் டெல்லியில் தானியங்கி உலர் சலவையகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையத்தை ஒப்பந்த அடிப்படையில் ஒரு தனியார் நிறுவனம் குத்தகைக்கு எடுத்து நடத்தி வருகிறது.

இன்று பிற்பகல் இங்கு வழக்கம்போல் பணிகள் நடைபெற்றபோது கொதிகலனில் உள்ள நீராவியை வெளியேற்றும் ஒரு பைப் உடைந்து அங்கு வேலை செய்து கொண்டிருந்த பிரதீப் (37) என்பவர் தலையின்மீது வேகமாக மோதியது.

இதனால், பலத்த தலைக்காயத்துடன் உடனடியாக ரெயில்வே ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், அங்கிருந்து ராம் மனோகர் லோகியா ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் அளித்த தீவிர சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இவ்விபத்து தொடர்பான தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்துசென்ற ரெயில்வே உயரதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
Tags:    

Similar News