செய்திகள்

டெல்லியில் புதிய பீர் தொழிற்சாலைகளுக்கு அனுமதி அளிக்க அரசு முடிவு

Published On 2017-12-17 09:15 GMT   |   Update On 2017-12-17 09:15 GMT
நாட்டின் தலைநகரான டெல்லியில் புதிதாக சிறிய ரக பீர் தொழிற்சாலைகளுக்கு அனுமதி அளிக்க டெல்லி அரசு முடிவு செய்துள்ளது.
புதுடெல்லி:

அரியானா போன்ற சில மாநிலங்களில் போதை குறைவான பீர் வகைகளை உற்பத்தி செய்யும் சிறிய ரக மது ஆலைகள் இயங்கி வருகின்றன. இங்கு ஊறலில் இருந்து புதிதாக வடிக்கப்பட்ட மது வகைகள் புதுமை மாறாத சுவையுடன் வாடிக்கையாளர்களை வெகுவாக ஈர்த்து வருகிறது.

இதனால், குர்கான், பரிதாபாத், அரியானா ஆகிய இடங்களுக்கு தலைநகர் டெல்லியில் இருந்து பலர் சுவை மிக்க பீர் வகைகளை தேடி செல்கின்றனர்.

சமீபத்தில் டெல்லி அரசால் உருவாக்கப்பட்ட புதிய ஆயத்தீர்வு கொள்கையின்படி, இத்தகைய சிறிய ரக மது ஆலைகளை டெல்லிக்குள் அனுமதிக்க முடிவு செய்யப்பட்டது. இவ்வாறு ஆலைகளை அமைக்க மூன்றுபேர் ஏற்கனவே விண்ணப்பித்துள்ளனர்.



இந்நிலையில், டெல்லி நகரில் புதிதாக சிறிய ரக பீர் தொழிற்சாலைகளுக்கு அனுமதி அளிக்க டெல்லி அரசு முடிவு செய்துள்ளது. இதையடுத்து, ஓட்டல்கள், பப்கள் போன்ற இடங்களிலும் புத்தம் புதிய பீர் வகைகள் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

Similar News