செய்திகள்

5 பாகிஸ்தான் குழந்தைகளுக்கு மருத்துவ விசா - சுஷ்மா சுவராஜ்

Published On 2017-12-15 07:38 GMT   |   Update On 2017-12-15 07:38 GMT
இந்தியாவில் சிகிச்சை பெற 5 பாகிஸ்தான் குழந்தைகளுக்கு மருத்துவ விசா வழங்க வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் அனுமதி அளித்துள்ளார்.
புதுடெல்லி:

பாகிஸ்தானைச் சேர்ந்த பல நோயாளிகளுக்கு இந்தியாவில் சிகிச்சை பெற மருத்து விசா வழங்கப்பட்டு வருகிறது. அவர்கள் இந்தியா வருவதற்கு வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார்.

இந்நிலையில், பாகிஸ்தானைச் சேர்ந்த 10 மாத குழந்தை முகமத் அக்மத், அபுசார் (7), மொஹிர் (7), ஜினாப் ஷகாதி (8), முகமது ஜையின் அஸ்லாம் (9) என 5 குழந்தைகளுக்கு இந்தியாவி்ல் மருத்துவ சிகிச்சை வேண்டி விசா வழங்கிட கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அவர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு இந்தியாவில் சிகிச்சை பெற மருத்து விசா வழங்கி உள்ளதாக வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.

மேலும், பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகத்திலிருந்து வந்த தகவலின் படி, அல்தப் ஹூசின் மற்றும் அமீர் ரசா ஆகிய இருவருக்கும் மருத்துவ விசா வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கும் விசா விரைவில் வழங்கப்படும் என சுஷ்மா நம்பிக்கை தெரிவித்துள்ளார். அவர்கள் முழுமையாக குணமடைந்து நாடு திரும்புவதற்கு கடவுளை வேண்டி கொள்கிறேன் என கூறினார்.

Tags:    

Similar News