செய்திகள்

புவி வெப்பமயமாதலும்.. குளிர்கால கூட்டத்தொடரும்: தாமதம் குறித்து விளக்கமளித்த மோடி

Published On 2017-12-15 05:44 GMT   |   Update On 2017-12-15 10:55 GMT
புவி வெப்பமயமாதலால் குளிர்காலம் முழு அளவில் வருவதற்கு தாமதமானதாக பிரதமர் மோடி, பாராளுமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் கூறினார்.
புதுடெல்லி:

பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் தலைநகர் டெல்லியில் சற்று நேரத்தில் தொடங்க உள்ளது. இந்த கூட்டத் தொடர் ஜனவரி 5-ம் தேதி வரை நடைபெற உள்ளது. முத்தலாக் தடுப்பு சட்ட மசோதா உள்ளிட்ட பல முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற அரசு முடிவெடுத்துள்ளது. மேலும், நிலுவையில் உள்ள சில மசோதாக்களையும் நிறைவேற்ற அரசு திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில், கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்னதாக பிரதமர் மோடி, செய்தியாளர்களிடம் பேசியதாவது, “பொதுவாக தீபாவளி சமயத்தில் குளிர்காலம் தொடங்கிவிடும். ஆனால், புவி வெப்பமயமாதலால் முழு அளவிலான குளிர்காலம் வரவில்லை. குளிர்கால கூட்டத்தொடர் இப்போது தொடங்குகிறது, இந்த கூட்டத்தொடரை தகுந்த முறையில் பயன்படுத்திக்கொள்ளும் வாய்ப்பு உள்ளது. உத்வேக விவாதங்கள் இடம் பெறும் என நம்புகிறேன்” என்றார்.

மேலும், “நேற்று நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் சில யோசனைகளை முன்வைத்தேன். நாடு முன்னோக்கிச் செல்ல ஆரோக்கியமான விவாதம் நடத்த வேண்டும் என கோரினேன்” என்றும் அவர் தெரிவித்தார்.
Tags:    

Similar News