செய்திகள்

சுய விளம்பரத்துக்காகவே யாத்திரை நடத்துகிறார் நிதிஷ்குமார்: தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டு

Published On 2017-12-15 00:09 GMT   |   Update On 2017-12-15 00:09 GMT
சுய விளம்பரத்துக்காகவே பீகார் முதல் மந்திரி நிதிஷ்குமார் யாத்திரைகளை நடத்தி வருகிறார் என ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவரும், முன்னாள் துணை முதல் மந்திரியுமான தேஜஸ்வி யாதவ் குற்றம் சாட்டியுள்ளார்.
பாட்னா:

சுய விளம்பரத்துக்காகவே பீகார் முதல் மந்திரி நிதிஷ்குமார் யாத்திரைகளை நடத்தி வருகிறார் என ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவரும், முன்னாள் துணை முதல் மந்திரியுமான தேஜஸ்வி யாதவ் குற்றம் சாட்டியுள்ளார்.  

பீகார் மாநிலத்தில் பாஜவுடன் கூட்டணி அமைத்து  ஐக்கிய ஜனதா தளம் கட்சி ஆட்சி நடத்தி வருகிறது. முதல் மந்திரியாக நிதிஷ்குமார் பதவி வகித்து வருகிறார்.

அரசின் பல்வேறு திட்டங்களை மக்களுக்கு விளக்கும் வகையில் விகாஸ் சமிக்‌ஷா என்ற யாத்திரையை முதல் மந்திரி நிதிஷ்குமார் மாநிலம் முழுவதும் நடத்தி வருகிறார்.



இந்நிலையில், சுய விளம்பரத்துக்காகவே முதல் மந்திரி நிதிஷ்குமார் யாத்திரையை நடத்தி வருகிறார் என முன்னாள் துணை முதல் மந்திரியும், எதிர்கட்சி தலைவருமான தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பீகார் மக்களை ஏமாற்றுவதற்காக முதல் மந்திரி நிதிஷ்குமார் விகாஸ் சமிக்‌ஷா யாத்திரையை நடத்தி வருகிறார். மாநிலத்தின் வளர்ச்சியில் அவர் அக்கறை கொள்ளவில்லை. அவர் சுய விளம்பரத்துக்காகவே இந்த யாத்திரையை நடத்தி வருகிறார்.

மக்களின் அரசு பணத்தில் முதல் மந்திரி தனது பெயரை பிரபலப்படுத்தி வருகிறார். மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி செய்து வரும் பா.ஜ.க.வால் மாநிலத்துக்கு எந்த பயனும் இல்லை என குற்றம் சாட்டி பேசினார்.
Tags:    

Similar News