செய்திகள்

குஜராத்தில் பிரதமர் மோடி 48 மணிநேர சூறாவளி பிரசாரம்

Published On 2017-12-03 08:35 GMT   |   Update On 2017-12-03 08:35 GMT
சட்டசபை தேர்தலை எதிர்நோக்கியுள்ள குஜராத் மாநிலத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்றும் நாளையும் 30-க்கும் மேற்பட்ட பொதுகூட்டங்களில் பங்கேற்று தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார்.
அகமதாபாத்:

சட்டசபை தேர்தலை எதிர்நோக்கியுள்ள குஜராத் மாநிலத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்றும் நாளையும் 30-க்கும் மேற்பட்ட பொதுகூட்டங்களில் பங்கேற்று தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார்.

182 தொகுதிகளைக் கொண்ட குஜராத் சட்டசபைக்கு டிசம்பர் 9 மற்றும் 14-ம் தேதிகளில் இரு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது.

முதல்கட்டமாக 89 தொகுதிகளுக்கும் இரண்டாம் கட்டமாக 93 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. டிசம்பர் 18-ம் தேதி எண்ணப்பட்டு அன்று பிற்பகலில் முடிவுகள் அறிவிக்கப்படும்.

இதையடுத்து, குஜராத் ஆகிய மாநிலத்திற்கு விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு ஆட்சியை தக்கவைத்து கொள்ள பா.ஜ.க. தீவிரமாக பிரசாரம் செய்து வருகிறது.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இன்றும் நாளையும் 30-க்கும் மேற்பட்ட பொதுகூட்டங்களில் பங்கேற்று பா.ஜ.க. வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டும் வகையில் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

இன்று காலை குஜராத் மாநிலத்துக்கு வந்த அவர் நன்பகல் வரை கட்ச் மற்றும் பரூச் மாவட்டத்தில் நடைபெற்ற இரு தேர்தல் பிரசார கூட்டங்களில் பங்கேற்று பா.ஜ.க. வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார். இன்று பத்துக்கும் மேற்பட்ட பொதுகூட்டங்களில் பேசும் பிரதமர் மோடி நாளை வரை சுமார் 30 பொதுகூட்டங்களில் பங்கேற்கும் வகையில் அவரது பயண திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News