செய்திகள்

ஐதராபாத் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு அமெரிக்கா புறப்பட்டார் இவாங்கா

Published On 2017-11-29 21:14 GMT   |   Update On 2017-11-29 21:14 GMT
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்துக்கு இரண்டு நாள் சுற்றுப்பயணம் வந்த அமெரிக்க அதிபட் டொனால்ட் டிரம்ப் மகள் இவாங்கா நேற்று இரவு அமெரிக்கா புறப்பட்டு சென்றார்.
ஐதராபாத்:

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்துக்கு இரண்டு நாள் சுற்றுப்பயணம் வந்த அமெரிக்க அதிபட் டொனால்ட் டிரம்ப் மகள் இவாங்கா நேற்று இரவு அமெரிக்கா புறப்பட்டு சென்றார்.

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் சர்வதேச தொழில் முனைவோர் மாநாடு நேற்று நடைபெற்றது. இந்த மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.

இதில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் மகள் இவாங்கா டிரம்ப் கலந்து கொண்டு பேசினார். அமெரிக்க தொழில் முனைவோர் குழுவுக்கு தலைமை தாங்கி அழைத்து வந்தார்.



இதைத்தொடர்ந்து, வரலாற்று சிறப்புமிக்க பலாக்னுமா அரண்மனையில் அரசு சார்பில் நேற்று இரவு சிறப்பு விருந்து அளிக்கப்பட்டது. இந்த விருந்தில் பிரதமர் மோடி, இவாங்கா டிரம்ப் மற்றும் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

இதையடுத்து, இன்று ஐதராபாத் புறநகர் பகுதியில் உள்ள கோல்கொண்டா கோட்டைக்கு இவான்கா சென்றார். சுமார் 40 நிமிடங்கள் சுற்றிப்பார்த்த அவரிடம் முகலாய மன்னர் ககாடியா, குதுப் ஷாஹி ஆகியோர் காலத்தில் கட்டப்பட்ட கோல்கொண்டா கோட்டையின் சிறப்பை பற்றி இந்திய அதிகாரிகள் விளக்கி கூறினர்.

இந்நிலையில், ஐதராபாத் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு இவாங்கா டிரம்ப், நேற்று இரவு ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். அமெரிக்கா புறப்பட்ட அவரை இந்திய தூதரக அதிகாரிகள் வழியனுப்பி வைத்தனர்.  
Tags:    

Similar News