செய்திகள்

இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே உடன் காங்கிரஸ் தலைவர்கள் சந்திப்பு

Published On 2017-11-23 18:20 GMT   |   Update On 2017-11-23 18:21 GMT
அரசு முறைப்பயணமாக இந்தியா வந்துள்ள இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவை மன்மோகன் சிங், சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சி தலைவர்கள் சந்தித்து பேசினர்.
புதுடெல்லி:

இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே 4 நாள் பயணமாக தனது மனைவி மைத்ரி விக்ரமசிங்கேவுடன் கடந்த செவ்வாய்க்கிழமை இந்தியா வந்தார். இன்று டெல்லி வந்த விக்ரமசிங்கே, பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். பின்னர் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தையும் சந்தித்து பேசினார்.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி தலைமையிலான 4 பேர் கொண்ட குழுவினர் விக்ரமசிங்கேவை சந்தித்து பேசினர். அந்த குழுவில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், துணைத்தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற மேல்சபை துணைதலைவர் ஆனந்த் ஷர்மா ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.



இந்த சந்திப்பின்போது பேசப்பட்ட விஷயங்கள் குறித்த விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. தனது 4 நாள் பயணத்தை முடித்துக்கொண்டு ரணில் விக்ரமசிங்கே நாளை இலங்கை புறப்படுகிறார்.
Tags:    

Similar News