செய்திகள்

‘செக்’ பரிவர்த்தனை முறையை ரத்து செய்ய திட்டமா? மத்திய அரசு விளக்கம்

Published On 2017-11-23 15:59 GMT   |   Update On 2017-11-23 15:59 GMT
மின்னணு பணப்பரிமாற்றத்தை ஊக்குவிக்கும் வகையில் காசோலை நடைமுறையை கைவிட மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.
புதுடெல்லி:

மின்னணு பணப்பரிமாற்றத்தை ஊக்குவிக்கும் வகையில் காசோலை நடைமுறையை முற்றிலும் ஒழிக்க மத்திய அரசு திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியது.

வங்கிகளில் பணப்பரிமாற்றத்திற்காக பயன்படுத்தப்படும் காசோலைகளை மத்திய அரசு முழுவதும் நிறுத்தக் கூடும் எனவும், டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் மூலம் டிஜிட்டல் முறையிலான பணப்பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படலாம் எனவும் அகில இந்திய வர்த்தக கூட்டமைப்பின் செயலாளர் பிரவீண் கந்தேல்வால் கூறியிருந்தார்.

தற்போதைய நிலவரப்படி 95 விழுக்காட்டு வர்த்தக நடவடிக்கைகள் ரூபாய் நோட்டுகள் அல்லது காசோலைகள் மூலமாகவே நடைபெற்று வருகின்றன. எனவே காசோலைகளை ரத்து செய்தால் மற்றொரு பணமதிப்பிழப்பு நடவடிக்கையாகவே இருக்கும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் காசோலை நடைமுறையை திரும்ப பெறும் திட்டம் எதுவும் கிடையாது என மத்திய நிதி அமைச்சகம் மறுப்பு தெரிவித்து உள்ளது.

வங்கி காசோலை நடைமுறையை திரும்ப பெறும் வகையில் எந்தஒரு திட்டமும் பரிசீலனையில் இல்லை என மத்திய அரசு மீண்டும் உறுதிசெய்கிறது என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
Tags:    

Similar News