செய்திகள்

ஐதராபாத்தில் பிச்சை எடுத்த வசதியான பெண்கள்

Published On 2017-11-23 03:12 GMT   |   Update On 2017-11-23 03:12 GMT
அமெரிக்கா, லண்டனில் பணியாற்றிய 2 வசதியான பெண்கள் ஐதராபாத்தில் பிச்சை எடுத்த சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐதராபாத்:

ஐதராபாத்தை பிச்சைக்காரர்கள் இல்லாத நகரமாக ஆக்கும் பணியில் தெலுங்கானா மாநில சிறைத்துறையும், போலீசாரும், ஐதராபாத் மாநகராட்சியும் கூட்டாக ஈடுபட்டுள்ளன. இவர்கள் பிச்சைக்காரர்களை பிடித்து, அவர்களுக்கான ஆசிரமத்தில் (சிறப்பு இல்லம்) அடைத்து வருகிறார்கள்.

சமீபத்தில், ஐதராபாத் தர்கா அருகே பிச்சை எடுத்த 30 பெண்களை பிடித்து சென்று ஆசிரமத்தில் அடைத்தனர். பிடிபட்டவர்களில், 50 வயதான ஒரு பெண்ணும், 44 வயதான ஒரு பெண்ணும் வெளிநாடுகளில் பணியாற்றியவர்கள், நன்றாக ஆங்கிலம் பேசுபவர்கள் என்பதை அறிந்து ஊழியர்கள் வியந்து போனார்கள்.

50 வயதான பெண், எம்.பி.ஏ. படித்து விட்டு, லண்டனில் கணக்காளராக பணியாற்றியவர். கணவரை இழந்த இவர், ஒரு சாமியாரின் அறிவுரையால், பிச்சை எடுக்க தொடங்கினார். அவருடைய மகன், அமெரிக்காவில் கட்டிட கலை வல்லுனராக இருக்கிறார்.

44 வயதான பெண், அமெரிக்காவில் ‘கிரீன் கார்டு’ பெற்று பணியாற்றியவர். அவரது பரம்பரை சொத்துகளை உறவினர்கள் பறித்துக் கொண்டதால், பிச்சை எடுக்க தொடங்கினார்.

‘இனிமேல் பிச்சை எடுக்க மாட்டோம்’ என்று எழுதி வாங்கிக்கொண்டு இருவரையும் உறவினர்களுடன் ஆசிரம ஊழியர்கள் அனுப்பி வைத்தனர்.
Tags:    

Similar News