செய்திகள்

பிரமோஸ் ஏவுகணை சோதனை வெற்றி: பிரதமர் மோடி பாராட்டு

Published On 2017-11-23 00:42 GMT   |   Update On 2017-11-23 00:42 GMT
இந்தியாவின் ராணுவ ஆராய்ச்சி அபிவிருத்தி நிறுவனம் தயாரித்துள்ள பிரமோஸ் அதிவேக (சூப்பர் சோனிக்) ஏவுகணை சோதனை நேற்று வெற்றிகரமாக நடந்தது. இதற்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்து உள்ளார்.
புதுடெல்லி:

இந்தியாவின் ராணுவ ஆராய்ச்சி அபிவிருத்தி நிறுவனம் தயாரித்துள்ள பிரமோஸ் அதிவேக (சூப்பர் சோனிக்) ஏவுகணை சோதனை நேற்று வெற்றிகரமாக நடந்தது. இதற்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்து உள்ளார். இதுபற்றி அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், “சுகோய் போர் விமானத்தில் இருந்து முதல் முறையாக நடத்தப்பட்ட பிரமோஸ் அதிவேக ஏவுகணை வெற்றிகரமாக நடந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்த குறிப்பிடத்தக்க சாதனையை படைப்பதற்கு பங்காற்றிய அனைவருக்கும் வாழ்த்துகள்” என்று குறிப்பிட்டு இருந்தார்.

இதேபோல் ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் தனது டுவிட்டர் பதிவில், “பிரமோஸ் அதிவேக ஏவுகணை சோதனை மூலம் உலக சாதனை படைக்கப்பட்டு இருக்கிறது. இந்த வரலாற்று சாதனையை நிகழ்த்திட்ட ராணுவ ஆராய்ச்சி அபிவிருத்தி நிறுவனம் மற்றும் பிரமோஸ் அதிகவேக ஏவுகணையை உருவாக்கிய அணியினர் அனைவருக்கும் எனது பாராட்டுகள்” என்று கூறி உள்ளார். 
Tags:    

Similar News