செய்திகள்

பஞ்சாப்: 5 மாடி தொழிற்சாலை கட்டிடம் இடிந்த விபத்தில் 13 பேர் பலி - உரிமையாளர் கைது

Published On 2017-11-22 18:26 GMT   |   Update On 2017-11-22 18:26 GMT
பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் கட்டிட விபத்தில் 13 பேரின் உயிரை காவு வாங்கிய பிளாஸ்டிக் தொழிற்சாலையின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
லூதியானா:

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் கடந்த திங்கள்கிழமை தனியாருக்கு சொந்தமான 5 மாடி பிளாஸ்டிக் தொழிற்சாலை கட்டிடம் ஒன்று திடிரென மளமளவென இடிந்து விழுந்தது. உடனடியாக அப்பகுதிக்கு விரைந்த தீயணைப்புத்துறையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டனர். அப்போது எதிர்பாராத விதமாக மீதமிருந்த கட்டிட பகுதிகளும் இடிந்து விழுந்தது.

இடிபாடுகளில் தீயணைப்புத்துறையினர் உட்பட 20க்கும் மேற்பட்டோர் சிக்கிக்கொண்டனர். அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்றது. இருப்பினும் 6 தீயணைப்பு வீரர்கள் உட்பட 13 பேர் இடிபாடுகளில் சிக்கி பலியாகினர்.  

பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங் விபத்து நடந்த இடத்தை நேரில் பார்வையிட்டார். அப்போது விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்ச ரூபாய் நீதியுதவி வழங்கப்படும் என அறிவித்தார். மேலும் விபத்தில் உயிரிழந்த தீயணைப்பு வீரர்களின் குடும்பங்களில் தலா ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் எனவும் அவர் அறிவித்தார்.

இந்த விபத்திற்கு காரணமான கட்டிடத்தின் உரிமையாளர் இந்தரஜித் சிங் கோலா என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். சுரிந்தர்குமார் என்னும் தீயணைப்புத்துறை வீரர் அளித்த புகாரின் அடிப்படையில் அவரை போலீசார் கைது செய்தனர்.
Tags:    

Similar News