செய்திகள்

வாக்காளர்களை கவர அமித்ஷா தமிழ் படிக்கிறார்

Published On 2017-11-21 07:24 GMT   |   Update On 2017-11-21 07:24 GMT
பாரதிய ஜனதா தலைவர் அமித்ஷா தமிழ்நாடு, மேற்கு வங்காளம், அசாம், மணிப்பூர் போன்ற மாநில மொழிகளை பேசவும் எழுதவும் கற்க முடிவு செய்துள்ளார்.
அகமதாபாத்:

பா.ஜனதா தலைவராக இருக்கும் அமித்ஷா நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்யும் போது கட்சி நிர்வாகிகளையும், தொண்டர்களையும், பொதுமக்களையும் சந்திக்கிறார்.

அப்போது அவர்களிடம் நேரடியாக அந்தந்த மாநில மொழிகளில் பேச திட்டமிட்டுள்ளார். பெரும்பாலான மாநிலங்களில் இந்தி மொழி பேசப்படுவதால் அவருக்கு மொழிப் பிரச்சனை ஏற்படுவதில்லை.

தமிழ்நாடு, மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களில் பா.ஜனதா கட்சி பலவீனமாக இருப்பதால் அங்கு கட்சிப் பணிகளில் நிர்வாகிகளுடனும், மக்களுடனும் பேசுவது அவசியம் என அமித்ஷா கருதுகிறார். பொதுமக்கள் நிர்வாகிகள் அவர்கள் பேசும் மொழி மூலமாக தெரிந்து கொண்டு கட்சி வளர்ச்சி பணிகளில் கவனம் செலுத்த முடியும் என்றும் நினைக்கிறார்.

இதேபோல் அடுத்து அசாம், மணிப்பூர் மாநில மொழிகளையும் பேசவும் எழுதவும் கற்க அமித்ஷா முடிவு செய்துள்ளார்.
Tags:    

Similar News