செய்திகள்

2022-ம் ஆண்டுக்குள் நக்சல் பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி: உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்

Published On 2017-11-12 05:26 GMT   |   Update On 2017-11-12 05:26 GMT
2022-ம் ஆண்டுக்குள் நக்சல் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் இயங்கும் கிளர்ச்சி குழுக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
லக்னோ:

உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்னோவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட மத்திய உள்துறை மந்திரி செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது, காஷ்மீர் விவகாரத்தை முடிவுக்கு கொண்டு வர அனைத்து வகையான சாத்தியக் கூறுகளையும் அரசு முயற்சிப்பதாக கூறினார்.

மேலும், கடந்த மூன்றரை ஆண்டுகால பா.ஜ.க ஆட்சியில் நக்சல் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் செயல்பட்டு வரும் ஆயுதக்குழுக்களின் தாக்குதல்கள் குறைந்துள்ளதாகவும், 2022-ம் ஆண்டுக்குள் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் தீவிரவாதிகளுக்கு நிதியளிப்பது தடுக்கப்பட்டுள்ளதாக பேசிய அவர், எதிர்கால பலன்களை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை கொண்டு வரப்பட்டதாக கூறினார்.
Tags:    

Similar News