செய்திகள்

மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜியை சந்தித்தார் கமல்ஹாசன்

Published On 2017-11-10 11:29 GMT   |   Update On 2017-11-11 02:51 GMT
மேற்கு வங்காள மாநிலத்திற்கு திரைப்பட விழாவுக்கு சென்றுள்ள நடிகர் கமல்ஹாசன் அங்கு அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜியை சந்தித்து பேசியுள்ளார்.
கொல்கத்தா:

தனது பிறந்த நாளை யொட்டி பத்திரிகையாளர்களை சந்தித்த கமல்ஹாசன், “நான் ஏற்கனவே அரசியலுக்கு வந்து விட்டேன். தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்திப்பேன். அதன்பிறகு கட்சி பெயர் பற்றி முடிவு செய்து அறிவிப்பேன்” என்று கூறினார்.

இதற்காக புதிய செல்போன் செயலி ஒன்றையும் அறிமுகம் செய்தார். அரசியல் கட்சி தொடங்க தனது அன்பு ரசிகர்களுடன், விவசாயிகளும் ஒத்துழைப்பு அளிப்பார்கள் என்றும் தெரிவித்தார்.

கமல் புதிய கட்சி தொடங்குவது குறித்து, ஏற்கனவே திருவனந்தபுரம் சென்று கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனை சந்தித்து ஆலோசனை செய்தார். சமீபத்தில் சென்னை வந்த டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால், கமல்ஹாசனை அவருடைய இல்லத்தில் சந்தித்தார். இருவரும் அரசியல் குறித்து பேசினார்கள். அவரிடமும் தான் கட்சி தொடங்குவது குறித்து ஆலோசனை செய்தார்.

பா.ஜ.க, காங்கிரஸ் அல்லாத முதல்- அமைச்சர்கள் வரிசையில் மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜியையும் சந்திக்க அவர் திட்டமிட்டு இருந்தார். இந்நிலையில், கொல்கத்தாவில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொண்ட கமல்ஹாசன் அங்கு அம்மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜியை சந்தித்து பேசினார்.
Tags:    

Similar News