செய்திகள்

உத்தரபிரதேச உள்ளாட்சி தேர்தலில் ஜனாதிபதியின் உறவினர்கள் போட்டியிட அனுமதி மறுப்பு

Published On 2017-11-08 21:46 GMT   |   Update On 2017-11-08 21:46 GMT
உத்தரபிரதேச உள்ளாட்சி தேர்தலில் பா.ஜனதா சார்பில் ஜனாதிபதியின் உறவினர்கள் ஜின்ஜாக் நகர் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிட மாவட்ட கட்சி தலைமை மறுத்துவிட்டது.
கான்பூர்:

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் குடும்பத்தை சேர்ந்த பலர் பா.ஜனதாவில் உள்ளனர். இந்த நிலையில் உத்தர பிரதேசத்தில் கான்பூர் ஊரக பகுதிகளுக்கு வருகிற 29-ந்தேதி 3-வது மற்றும் இறுதி கட்ட உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. இதற்கு மனு தாக்கல் செய்ய நாளை(வெள்ளிக்கிழமை) கடைசி நாள் ஆகும்.

இந்த தேர்தலில் பா.ஜனதா சார்பில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் உறவினர்களான தீபா கோவிந்த் மற்றும் வித்யாவதி ஆகியோர் ஜின்ஜாக் நகர் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிடுவதற்காக விண்ணபித்து இருந்தனர். ஆனால் இந்த இருவரில் யாருக்கும் சீட் தர மாவட்ட கட்சி தலைமை மறுத்துவிட்டது.

மேலும், இந்த பதவிக்கு போட்டியிட சரோஜினி தேவி கோரி என்பவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. கட்சிக்கு ஆற்றிய பங்களிப்பின் மற்றும் தகுதி அடிப்படையில் சரோஜினி தேவி கோரிக்கு சீட் வழங்கப்பட்டு இருப்பதாக மாவட்ட பா.ஜனதா தலைவர்கள் தெரிவித்தனர். 
Tags:    

Similar News