செய்திகள்

பிரிட்டன் இளவரசர் சார்லஸ் - கமீலா தம்பதியினர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு

Published On 2017-11-08 15:58 GMT   |   Update On 2017-11-08 15:58 GMT
இரண்டு நாள் அரசுமுறை சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ள பிரிட்டன் இளவரசர் சார்லஸ் மற்றும் அவரது மனைவி கமீலா பிரதமர் மோடியை இன்று சந்தித்து பேசினர்.
புதுடெல்லி:

பிரிட்டன் இளவரசர் சார்லஸ் மற்றும் கமீலா தம்பதியினர் சிங்கப்பூர், மலேசியா, இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளுக்கு 11 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர். அதன் ஒரு பகுதியாக இரண்டு நாள் பயணமாக இந்தியாவுக்கு இன்று வருகை தந்தனர்.

டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கிய பிரிட்டன் இளவரசர் சார்லஸ் மற்றும் கமீலா தம்பதியினரை வெளியுறவு துறை இணையமைச்சர் வி.கே.சிங் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதனையடுத்து, இன்று மாலை பிரதமர் மோடியை அரச தம்பதியினர் சந்தித்தனர். அப்போது, பிரிட்டன் ராணி எலிசபெத் உடல்நிலை குறித்து மோடி கேட்டறிந்தார். மேலும், சில முக்கிய விவகாரங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றது.

நாளை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை அரச தம்பதியினர் சந்திக்க உள்ளனர். அப்போது, அரச தம்பதியினருக்கு ஜனாதிபதி விருந்தளிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Tags:    

Similar News