search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இளவரசர் சார்லஸ்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஜனவரி 17 அன்று கேத்தரினுக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றது
    • தம்பதிகளுக்கு இடையே கருத்து வேறுபாடுநிலவுவதாகவும் வதந்திகள் உலவுகின்றன

    பிரிட்டிஷ் இளவரசர் சார்லசின் மனைவி, கேத்தரின் மிடில்டன் (Catherine Middleton).

    சுமார் 2 மாதங்களாக, 42-வயதாகும் "கேட்" (Kate) என அழைக்கப்படும் கேத்தரின் மிடில்டன் பொதுவெளியில் காணப்படவில்லை. இது பல்வேறு யூகங்களுக்கும், சந்தேகங்களுக்கும் வழிவகுத்துள்ளது.

    கடந்த ஜனவரி 17 அன்று, பிரிட்டிஷ் அரண்மனையின் அதிகாரபூர்வ அலுவலகம், கேத்தரினுக்கு வயிற்று பகுதியில் அறுவை சிகிச்சை நடைபெற்றதாகவும் அவர் ஈஸ்டர் பண்டிகை காலகட்டத்தில் மீண்டும் பொதுவெளிக்கு திரும்புவார் என தெரிவித்தது.

    ஆனால், அவர் இதுவரை காணப்படாததால் சமூக வலைதளங்களில் ஏராளமான வதந்திகள் பரவி வருகின்றன. கேத்தரினின் உடல்நலம் குறித்தும் சந்தேகங்கள் எழுப்பப்பட்டு வரும் நிலையில், அரண்மனை வட்டாரங்கள் இதுவரை அதிகாரபூர்வமாக ஏதும் தெரிவிக்கவில்லை.

    இதற்கு சான்றாக, ஒரு நினைவு தின நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த பிரிட்டிஷ் இளவரசர் சார்லஸ், பாதியிலேயே "சொந்த விஷயமாக" புறப்பட்டு சென்றதை சமூக வலைதளங்களில் பயனர்கள் குறிப்பிட்டு அவரும் தனது மனைவியின் உடல்நலம் குறித்து ஏதும் தெரிவிக்காமல் இருப்பதை பயனர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.


    கேத்தரினின் தற்போதைய உடல்நிலை குறித்து புகைப்படங்கள் ஏதும் சமூக வலைதளங்களில் வெளியாகாததும் வதந்திகளுக்கு மேலும் வலுவூட்டுகிறது.

    கேத்தரினுக்கும், அவரது கணவர் சார்லசிற்கும் இடையே கருத்து வேறுபாடு உள்ளதாகவும், அதனால் கேத்தரின் மன உளைச்சலில் இருப்பதாகவும் அரண்மனைக்கு நெருக்கமானவர்கள் சிலர் வலைதளங்களில் பதிவு செய்தனர்.

    உடல்நலம் தேறி வந்த கேத்தரின், திடீரென "கோமா" நிலைக்கு சென்று விட்டதாகவும் சில உறுதிப்படுத்தப்படாத கருத்துகள் இணையத்தில் உலவுகின்றன.

    பிரிட்டிஷ் அரண்மனைக்கு விசுவாசமிக்க பெரும்பாலான இங்கிலாந்து பொதுமக்கள் கேத்தரின் விரைவில் உடல்நலம் தேற வேண்டும் என்பதையே விரும்புகின்றனர்.

    • முதல்முறையாக மன்னர் சார்லஸ் மற்றும் ரிஷி சுனக் சந்திப்பு நடைபெற்றது.
    • என் துயரத்தை பெரும்பாலான சமயங்களில் குறைத்துள்ளன.

    இங்கிலாந்து மன்னர் சார்லஸ் மற்றும் அந்நாட்டு பிரதமர் ரிஷி சுன்க் நேரில் சந்தித்து பேசினர். மன்னர் சார்லஸ்-க்கு புற்றுநோய் இருப்பது உறுதிப்படுத்தப்பட்ட பிறகு, முதல்முறையாக மன்னர் சார்லஸ் மற்றும் ரிஷி சுனக் சந்திப்பு நடைபெற்றுள்ளது.

    பக்கிங்காம் அரண்மனையில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது, மன்னர் சார்லஸ், "பல்வேறு அற்புதமான தகவல்கள் மற்றும் வாழ்த்து அட்டைகள் எனக்கு வந்துள்ளன. இவை என் துயரத்தை பெரும்பாலான சமயங்களில் குறைத்துள்ளன," என்று தெரிவித்தார்.

    "நாங்கள் அனைவரும் உங்களுக்கு பின்புலமாக இருக்கிறோம். இந்த தேசம் உங்களுக்கு ஆதரவாக நிற்கிறது," என்று மன்னர் சார்லஸ்-இடம் ரிஷி சுனக் தெரிவித்தார்.

    • சார்லஸ் இளவரசராக இருந்தபோது 30 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்தார்.
    • பத்மினி கோலாப்புரே முத்தமிட்ட இளவரசர் இங்கிலாந்தின் மன்னராக மகுடம் சூடி விட்டார்.

    மும்பை

    இங்கிலாந்து ராணி எலிசபெத் மரணத்தை தொடர்ந்து, அவரது மகன் சார்லஸ் புதிய மன்னராக பதவி ஏற்றுள்ளார்.

    இவர் இளவரசராக இருந்தபோது 30 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்தார். அப்போது மும்பை ராஜ்கமல் சினிமா ஸ்டூடியோ வருகை தந்தார். இந்த தருணத்தில் எதிர்பாராத நிகழ்வு நடந்தது.

    அந்த ஸ்டூடியோவில் இருந்த சினிமா பிரபலங்கள் அனைவரும் இளவரசர் சார்லசை வரவேற்க காத்து நின்றனர். சார்லசுக்கு வரவேற்பு அளிக்க ஆரத்தி எடுத்து மாலை அணிவிக்கப்பட்டது. அப்போது அங்கு நின்ற இந்தி மற்றும் மராத்தி நடிகையான பத்மினி கோலாப்புரே சார்லஸ் அருகே நெருங்கினார். திடீரென அவரது கன்னத்தில் "நச்"சென்று முத்தம் கொடுத்து விட்டார். இது இளவரசர் சார்லசுக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது. அங்கு நின்றவர்களையும் வியப்பில் ஆழ்த்தியது. பாதுகாப்பு அதிகாரிகள் பதற்றம் அடைந்தனர்.இது உலக அரங்கில் தீப்பொறியாக பரபரப்பை ஏற்படுத்தியது.

    இருப்பினும் இளம்பெண் ஒருவர் இதுபோன்று நடந்து கொண்டது இந்திய கலாசாரத்துக்கு எதிரானது என்ற எதிர்ப்பு போராட்டங்களும் நடந்தன. இதற்கெல்லாம் நடிகை பத்மினி கோலாப்புரே கவலைப்படவில்லை.

    தற்போது அவர் முத்தமிட்ட இளவரசர் இங்கிலாந்தின் மன்னராக மகுடம் சூடி விட்டார். இந்த தருணத்தில் நடிகை பத்மினி கோலாப்புரேயிடம் 30 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம் குறித்து கேட்கப்பட்டது. அப்போது அவர் மிகவும் மகிழ்ச்சியுடன் பழைய நினைவலைகளை பகிர்ந்தார்.

    அவர் கூறியதாவது:-

    ராஜ்கமல் ஸ்டூடியோவில் நான் இளவரசர் சார்லசை முத்தமிட்ட நினைவுகளை ஒருபோதும் மறக்க முடியாது. அவர் தற்போது மன்னராகி விட்டார். இந்த சந்தர்ப்பத்தில் எனது நினைவுகள் வானத்தில் பறக்கிறது.

    இளவரசராக இருந்த சார்லசை முத்தமிடும் தைரியம் எனக்கு எப்படி வந்தது என்று தெரியவில்லை. ஆனால் அது நடந்து விட்டது. அதற்கு அவர் என்ன எதிர்வினையாற்றினார் என நினைவில்லை. ஆனால் அது என்னை சிரிக்க வைத்தது. அவருடைய அணுகுமுறையும், நடத்தையும் நட்பாக இருந்தது என்பது எனக்கு நினைவிருக்கிறது. மறுநாள் காலையில் உலக பத்திரிகைகளில் நான் முத்தமிட்ட படம் முதல் பக்கங்களில் வந்தது. இதை நான் நினைத்து கூட பார்க்கவில்லை.

    ஒரு தடவை நான் இங்கிலாந்து சென்றபோது, விமான நிலையத்தில் குடியுரிமை அதிகாரி எனது பாஸ்போர்ட்டை பார்த்தார். அப்போது நீங்கள் தான் இளவரசர் சார்லசை முத்தமிட்ட நடிகையா? என்று கேட்டார். அப்போது ஆமாம் என்றேன். அதற்கு அவர் வெட்கத்துடன் தலையை தாழ்த்தி கொண்டார்.

    இப்போது மன்னர் சார்லசை நீங்கள் எப்படி முத்தமிடுவீர்கள் என்று பலர் வேடிக்கையாக என்னை கேட்டு வருகிறார்கள்.

    இவ்வாறு நடிகை பத்மினி கோலாப்புரே கூறினார்.

    • இளவரசர் 3-ம் சார்லஸ் இங்கிலாந்தின் புதிய ராஜாவாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
    • இவர் அரியணை ஏறும் விழா விரைவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    லண்டன்:

    இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத் தனது 96-வது வயதில் நேற்று உயிரிழந்தார். ஸ்காட்லாந்தில் உள்ள பால்மொரல் பண்ணை வீட்டில் ராணி 2-ம் எலிசபெத் உயிரிழந்ததாக பக்கிங்காம் அரண்மனை தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், ராணி எலிசபெத் உயிரிழந்ததை தொடர்ந்து, இங்கிலாந்தின் புதிய ராஜாவாக இளவரசர் 3-ம் சார்லஸ் அரியணை ஏறியுள்ளார். சார்லஸ் பிலிப் அர்துர் ஜார்ஜ் என்ற இயற்பெயர் கொண்ட 3-ம் சார்லஸ் ராணி எலிசபெத்தின் மூத்த மகன் ஆவார். 73 வயதான சார்லஸ் இங்கிலாந்தின் புதிய ராஜாவாக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் அரியணை ஏறும் விழா விரைவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    2005-ம் ஆண்டு கமிலா என்பவரை சார்லஸ் 2-வது திருமணம் செய்துகொண்டார். இங்கிலாந்தின் புதிய ராஜாவாக சார்லஸ் அரியணை ஏற உள்ள நிலையில் ராணியாக கமிலா அரியணை ஏறுகிறார்.

    • சார்லஸ் அறக்கட்டளை பல்வேறு தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடை அளித்து வருகிறது.
    • பின்லேடன் குடும்பத்திடம் இருந்து இளவரசர் சார்லஸ் தனது அறக்கட்டளைக்கு நிதி பெற்றதாக செய்தி வெளியானது.

    லண்டன்:

    அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்டவர் ஒசாமா பின்லேடன். அல்-கொய்தா பயங்கரவாத இயக்கத்தின் தலைவரான பின்லேடனை கடந்த 2011-ம் ஆண்டு அமெரிக்கா சுட்டுக் கொன்றது.

    இதற்கிடையே, சர்வதேச அளவில் பயங்கரவாதியாக அறியப்பட்ட பின்லேடன் குடும்பத்திடம் இருந்து இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் பணம் பெற்றதாக வெளியாகியிருக்கும் செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஒசாமா பின்லேடனின் சகோதரர்களான பாக்ரி மற்றும் ஷஃபீக்கிடம் இருந்து இளவரசர் சார்லஸ் நடத்தி வரும் அறக்கட்டளை கடந்த 2011 -ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரை 1 மில்லியன் பவுண்டுகளை நன்கொடையாக பெற்றதாக லண்டன் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

    பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்களிடம் இளவரசர் சார்லஸ் தலைமையிலான அறக்கட்டளை நன்கொடை பெறலாமா என பிரிட்டன் பத்திரிகைகள் கடுமையாக தாக்கி செய்தி வெளியிட்டுள்ளன.

    இந்நிலையில், சார்லஸ் அறக்கட்டளை தலைவர் சர் அயன் செஷர் கூறியதாவது:

    சார்லஸ் அறக்கட்டளை பிரிட்டனில் பல்வேறு தொண்டு நிறுவனங்களின் திட்டங்களுக்கு நன்கொடை அளித்து வருகிறது.

    ஒசாமா பின்லேடனுக்கும், அவரது உறவினர்களுக்கும் 1994 முதல் எந்தத் தொடர்பும் இல்லை. பின்லேடன் சகோதரர்கள் சார்லஸ் அறக்கட்டளைக்கு நன்கொடை அளித்தது உண்மை. பின்லேடன் செய்த பாவத்திற்கு பிராயச்சித்தமாக நன்கொடை தந்திருக்கலாம். இந்த பணம் சட்டப்படி உரிய விதிமுறைகளைப் பின்பற்றி பெறப்பட்டுள்ளது.

    அனைத்து அமைப்புகளிடம் தெரிவித்து ஒப்புதல் வாங்கப்பட்டுள்ளது. எல்லாம் வெளிப்படையாக நடந்துள்ளது. இதில் மறைப்பதற்கு ஏதுமில்லை. இந்த நன்கொடையை ஊடகங்கள் ஊதிப் பெரிதாக்குவது ஏன் எனத் தெரியவில்லை என தெரிவித்துள்ளார்.

    பிரிட்டன் இளவரசர் ஹாரி-மேகன் மார்க்லே திருமணத்தில் மேகன் மார்க்லேவின் தந்தைக்கு பதிலாக இளவரசர் சார்லஸ் மணமகளை மணமகனிடம் ஒப்படைப்பார் என கூறப்பட்டுள்ளது. #PrinceHarry #MeghanMarkle
    லண்டன்:

    பிரிட்டன் அரியணை வரிசையில் ஐந்தாவதாக அமரவுள்ளவர் இளவரசர் ஹாரி. கடந்த 2016-ம் ஆண்டில் இருந்து இளவரசர் ஹாரியும், அமெரிக்க நடிகையான மேகன் மார்க்லேவும் காதலித்து வந்தனர்.

    இந்த ஜோடியினர் கடந்த டிசம்பர் மாதத்தில் நிச்சயம் செய்துகொண்டனர். அதன்படி, இளவரசர் ஹாரி - மேகன் மார்க்லேயின் திருமணம் நாளை நடைபெற உள்ளது. திருமணம் முடிவு செய்ததில் இருந்து மார்க்லே குடும்பத்திலிருந்து பிரச்சனைகள் வந்த வண்ணம் உள்ளன. மார்க்லேவின் சகோதரர் இந்த திருமணத்தை நிறுத்துங்கள் என இளவரசர் ஹாரிக்கு கடிதம் எழுதினார். குடும்பத்தைச் சேர்ந்த பலரும் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.



    இதற்கிடையில், மேகனின் தந்தை தாமஸ் மார்க்லே உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதனால் அவரால் திருமணத்திற்கு வரமுடியாது என தகவல்கள் வெளியாகின.

    இந்நிலையில், ஹாரி-மார்க்லே திருமணத்தில் தனது தந்தைக்கு பதிலாக ஹாரியின் தந்தையும், வேல்ஸ் இளவரசருமான சார்லஸ் மணமகளை மணமகனிடம் ஒப்படைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். அதனை ஏற்றுக்கொண்டு இளவரசர் சார்லஸ் திருமணத்தில் மேகன் மார்க்லேவின் தந்தைக்கு பதிலாக இளவரசர் சார்லஸ் மணமகளை மணமகனிடம் ஒப்படைப்பார் என கெங்கிஸ்டன் அரண்மனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. #PrinceHarry #MeghanMarkle
    ×