செய்திகள்

பண மதிப்பை நீக்கியது சிந்தனையற்ற செயல்: ராகுல்காந்தி தாக்கு

Published On 2017-11-08 05:47 GMT   |   Update On 2017-11-08 05:48 GMT
பண மதிப்பை நீக்கியது பிரதமரின் சிந்தனையற்ற செயல் என ராகுல் காந்தி மீண்டும் இன்று மோடியை தாக்கி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
புதுடெல்லி:

பண மழிப்பு நீக்க நடவடிக்கையை காங்கிரஸ் கட்சி ஆரம்பத்தில் இருந்தே மிகக்கடுமையாக எதிர்த்து வருகிறது.

பிரதமர் மோடியின் நடவடிக்கை இந்தியாவின் பொருளாதாரத்தை நொறுங்க செய்து விட்டதாக காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பேசி வருகிறார்கள்.

குறிப்பாக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி அடிக்கடி தனது டுவிட்டர் பக்கத்தில் பண மதிப்பு நீக்க நடவடிக்கையை விமர்சனம் செய்து வருகிறார். பிரதமர் மோடியின் இந்த திட்டம் மிகப்பெரிய தோல்வி அடைந்து விட்டதாக ராகுல் கேலி செய்தும் கருத்து பதிவிட்டு வருகிறார்.



இந்த நிலையில் பண மதிப்பு நீக்க அறிவிப்பு வெளியிடப்பட்ட இதே தினத்தில் ராகுல் மீண்டும் இன்று மோடியை தாக்கி பதிவிட்டுள்ளார். அதில் ராகுல் கூறி இருப்பதாவது:-

ரூ.500, ரூ.1000 நோட்டுகளை செல்லாது என்று அறிவித்தது மிகப்பெரிய பேரிடர் சம்பவமாகும். பிரதமரின் சிந்தனையற்ற செயலால் இது அமல்படுத்தப்பட்டுள்ளது.



பண மதிப்பு நீக்க நடவடிக்கை காரணமாக லட்சக்கணக்கான மக்களின் வாழ்வும், வாழ்வாதாரங்களும் அழிந்துள்ளது. அத்தகைய மக்களின் பக்கத்தில் அவர்களுக்கு ஆதரவாக காங்கிரஸ் நிற்கும் என்று தெரிவித்து கொள்கிறேன்.

இவ்வாறு ராகுல்காந்தி டுவிட்டரில் கூறி உள்ளார்.
Tags:    

Similar News