செய்திகள்

பண மதிப்பு நீக்கத்தை ஆதரிக்கும் மக்களுக்கு தலைவணங்குகிறேன்: பிரதமர் மோடி டுவிட்டரில் பாராட்டு

Published On 2017-11-08 05:21 GMT   |   Update On 2017-11-08 05:22 GMT
ஊழலையும், கருப்புப் பணத்தையும் ஒழிக்க மத்திய அரசு எடுத்த பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்கு ஆதரவு அளித்த மக்களுக்கு தலை வணங்குவதாக பிரதமர் மோடி டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

பண மதிப்பு நீக்க நடவடிக்கையானது நீண்ட கால இந்திய பொருளாதாரத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று மத்திய அரசு கூறி வருகிறது.

பண மதிப்பு நீக்கம் அறிவிக்கப்பட்ட நவம்பர் 8-ந்தேதியை கருப்பு தினம் ஆக எதிர்க்கட்சிகள் கடைபிடிக்கும் நிலையில், மத்திய அரசு இன்றைய தினத்தை கருப்பு பணத்தை ஒழிக்கும் தினமாக கொண்டாடி வருகிறது.

எதிர்க்கட்சிகளின் இன்றைய ஆர்ப்பாட்டத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் மத்திய மந்திரிகள் பண மதிப்பு நீக்கம் குறித்து விளக்கம் அளித்து வருகிறார்கள். பண மதிப்பு நீக்கத்தால் கிடைத்துள்ள நன்மைகள் பற்றி நாடு முழுவதும் பத்திரிகைகள் வாயிலாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

அவற்றில் மத்திய அரசின் நடவடிக்கைகள் அனைத்தும் நியாயமானவை. நெறி சார்ந்தவை என்று கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பிரதமர் மோடி இன்று காலை தனது டுவிட்டர் பக்கத்தில் பண மதிப்பு நீக்கம் தொடர்பாக ஒரு பதிவை வெளியிட்டார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-


கருப்புப் பணம் மற்றும் ஊழலுக்கு எதிராக இந்தியாவின் 125 கோடி மக்களும் போரிட்டுள்ளனர். இதில் மிகப்பெரிய வெற்றி கிடைத்துள்ளது.

ஊழலையும், கருப்புப் பணத்தையும் ஒழிக்க மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகளுக்கும், பணம் மதிப்பு நீக்கம் நடவடிக்கைக்கும் மக்கள் ஆதரவும், ஒத்துழைப்பையும் தந்துள்ளனர். அவர்களுக்கு நான் தலை வணங்குகிறேன்.

இவ்வாறு பிரதமர் மோடி அதில் கூறியுள்ளார்.
Tags:    

Similar News