செய்திகள்

உ.பி.: எக்ஸ்பிரஸ் ரெயில் - டேங்கர் லாரி மோதல் - ஒருவர் உயிரிழப்பு

Published On 2017-10-25 19:42 GMT   |   Update On 2017-10-25 19:42 GMT
உத்தரப்பிரதேச மாநிலம் பரேலியில் எக்ஸ்பிரஸ் ரெயிலும் டேங்கர் லாரியும் மோதிக்கொண்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 50 பேர் காயமடைந்தனர்.
பரேலி:

இந்திய ரயில்வேயினால் இயக்கப்பட்டுவரும் ராஜ்ய ராணி எக்ஸ்பிரஸ் ரெயில்கள் 10 வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகின்றன. இது மாநில தலைநகரங்களை பிற நகரங்களுடன் இணைக்கின்றன. உத்தரப்பிரதேச மாநிலத்தில் லக்னோவையும் மீரட் நகரையும் இணைக்கிறது.

இந்நிலையில், நேற்று லக்னோவிலிருந்து மீரட் சென்றுகொண்டிருந்த இந்த ரெயில் பரேலி மாவட்டத்தின் பிதாம்பார்பூர் ரெயில்வே சிக்னலை கடக்கும்போது எதிர்பாராதவிதமாக ஒரு டேங்கர் லாரியுடன் மோதியது. இந்த விபத்தில் டாங்கர் லாரியின் டிரைவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் இந்த விபத்தில் சுமார் 50 பேர் காயமடைந்தனர்.



விபத்து குறித்து தெரிந்ததும் அப்பகுதிக்கு விரைந்த போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் மீட்புப்பணிகளில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சாலை கடக்கும் பகுதியில் உள்ள ரெயில்வே சிக்னல் மூடப்படாததே விபத்துக்கு காரணம் என ரெயில்வேத்துறையினர் தெரிவித்துள்ளனர். 
Tags:    

Similar News