செய்திகள்

தாஜ்மஹாலின் அருகில் உள்ள வாகன நிறுத்தங்களை அகற்ற சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

Published On 2017-10-24 13:25 GMT   |   Update On 2017-10-24 13:25 GMT
உலக அதிசயங்களில் ஒன்றாக இருக்கும் தாஜ்மஹாலின் அருகே உள்ள வாகன நிறுத்தங்களை அகற்றுமாறு மாநில அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி:

உத்தரப்பிரதேசம் மாநிலம் ஆக்ரா யமுனை ஆற்றங்கரையில் அமைந்துள்ள தாஜ்மஹால் உலக அதிசயங்களில் ஒன்றாக உள்ளது. 17-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த கட்டிடம் சுற்றுச்சூழல் மாசுபாடுகளால் பாதிக்கப்படுவதாக தொடர்ந்து புகார் எழுந்த வண்ணம் உள்ளது. இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் பல மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், இரு நீதிபதிகள் பெஞ்சுக்கு இன்று விசாரணைக்கு வந்த இவ்வழக்கில், தாஜ்மஹாலை சுற்றி ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் இருக்கும் வாகன நிறுத்தங்களை அகற்றவேண்டும் என ஆக்ரா நகர நிர்வாகத்திற்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

கலாச்சார சின்னமான தாஜ்மஹாலை பாதுகாக்க வேண்டும் எனவும், நான்கு வாரங்களுக்குள் வாகன நிறுத்தங்கள் அகற்றப்பட வேண்டும் என நீதிபதிகள் தங்களது உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.
Tags:    

Similar News